திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்ற படங்கள் ஒரு மாதத்துக்கு பிறகு ஓடிடி தளங்களில் வெளியாகும். This Week OTT Release Movies
வார இறுதி நாட்களில் ஓடிடியில் படம் பார்த்து விடுமுறையை கொண்டாடுவதை பலரும் வழக்கமாக வைத்துள்ளனர். என்னென்ன படங்கள் வெளியாகும் என்றும் காத்திருக்கின்றனர்.
இந்த வாரம் எந்தெந்த ஓடிடியில் என்னென்ன படங்கள் வெளியாகும் என்பதை பார்க்கலாம்.
குடும்பஸ்தன் This Week OTT Release Movies
மணிகண்டன் நடிப்பில் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற குடும்பஸ்தன் திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
தண்டேல்
நாக சைதன்யா சாய்பல்லவி நடிப்பில் வெளியான தெலுங்கு திரைப்படமான தண்டேல் நெட்பிளிக்ஸ் தளத்தில் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டுள்ளது.
குழந்தைகள் முன்னேற்ற கழகம்!
யோகி பாபு, சரவணன், செந்தில் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான காமெடி படமான குழந்தைகள் முன்னேற்ற கழகம் டென்ட்கொட்டாய் மற்றும் ஆஹா ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
ராஜா கிளி
தம்பி ராமையா, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிப்பில் உமாபதி ராமையா இயக்கத்தில் வெளியான ராஜா கிளி, டென்ட்கொட்டாய் தளத்தில் வெளியாகியுள்ளது.
திரில்லர் படங்கள்
மலையாள திரில்லர் திரைப்படமான ரேகாசித்ரம் சோனி லைவ், ஹாலிவுட் திரில்லர் திரைப்படமான டெலிஷியஸ் நெட்பிளிக்ஸ் ஆகிய தளங்களில் வெளியாகியுள்ளன.