திரையரங்குகளில் வெளியான திரைப்படங்கள்
பபூன்
பபூன் – அசோக் வீரப்பன் இயக்கத்தில் வைபவ் நடிக்கும் பபூன் திரைப்படம் இன்று (செப்டம்பர் 23) தியேட்டர்களில் வெளியானது.
இந்த திரைப்படத்தில் அனேகா, ஜோஜூ ஜார்ஜ், நரேன் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இது முழுக்க முழுக்க ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியிருக்கிறது.
ட்ரிகர்
ட்ரிகர் – சாம் ஆண்டோன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் ட்ரிகர் திரைப்படம் இன்று வெளியானது. இப்படத்தில் அதர்வா, தான்யா ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ஆதார்
ஆதார் – ராம்நாத் இயக்கத்தில் கருணாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ஆதார் திரைப்படம் இன்று வெளியானது. சர்வதேச அளவிலான வணிக அரசியலை மையப்படுத்தி இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.
டிராமா
இயக்குனர் அஜூ குளுமலா இயக்கத்தில் கிஷோர், சார்லி ஆகியோர் நடித்திருக்கும் டிராமா திரைப்படம் இன்று வெளியானது.
குழலி
குழலி – கலையரன் இயக்கத்தில் காக்கா முட்டை திரைப்படத்தில் நடித்த விக்னேஷ் நடிப்பில் உருவாகியுள்ள குழலி திரைப்படமும் வெளியானது.
கிராமத்தில் நடக்கின்ற காதல் கதைக்களத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம், சர்வதேச திரைப்பட விழாக்களில் 16க்கும் மேற்பட்ட விருதுகளை குவித்தது.
ரெண்டகம்
மலையாளத்தில் கடந்த வாரம் ஃபெலினி இயக்கத்தில் வெளியான ஒட்டு திரைப்படத்தின் தமிழ் டப்பிங் வெர்ஷன் படமான ரெண்டகம் இன்று திரையரங்குகளில் வெளியானது.
அரவிந்த் சாமி, குஞ்சக்கோ போபன் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
ஒர்மகாளி
ஷாஜூ ஸ்ரீதர் நடிப்பில், விஸ்வபிரதாப் இயக்கியுள்ள ஒர்மகாளி திரைப்படம் வெளியானது.
சட்டம்பி
சட்டம்பி – அபிலாஷ் குமார் இயக்கத்தில் ஸ்ரீநாத் பாசி, செம்பன் வினோத் ஜோஸ் கிரேஸ் ஆண்டனி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் மலையாள படமான சட்டம்பி வெளியானது.
கிருஷ்ணா விருந்தா விகாரி
அனீஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நாக சவுரியா, ராதிகா, வெண்ணிலா கிஷோர் நடிப்பில் உருவாகியுள்ள கிருஷ்ணா விருந்தா விகாரி தெலுங்கு திரைப்படம் வெளியானது.
நாளை வெளியாகும் படங்கள்!
அவதார்
2019 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற அவதார் திரைப்படம் நாளை (செப்டம்பர் 24) தமிழ், தெலுங்கு, மலையாளம்,இந்தி உள்ளிட்ட மொழிகளில் மறு திரையிடல் செய்யப்படுகிறது.
Chup
இந்தி திரைப்படம் நாளை வெளியாகிறது. பால்கி இப்படத்தை இயக்கியுள்ளார். துல்கர் சல்மான், பூஜா பட், விஷால் பவ்சார், சன்னி டியோல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
dhokha round d corner
இந்தி திரைப்படம் நாளை வெளியாகிறது. மாதவன், தர்ஷன் குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தை குக்கி குலாத்தி இயக்கியுள்ளார். கிரைம் திரில்லர் வகையைச் சேர்ந்த படமாக உருவாகியுள்ளது.
ஓடிடியில் ரிலீசான படங்கள்
டைரி
இந்த வாரம் அருள்நிதி நடித்த டைரி திரைப்படம் ஆகா ஓடிடி தளத்தில் நள்ளிரவு 12 மணிக்கு வெளியானது.
பவுன்ஸர்
தமன்னா நடித்த பப்ளி பவுன்ஸர் இந்தி திரைப்படம் ஹாட் ஸ்டாரில் வெளியானது.
திருச்சிற்றம்பலம்
தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் வெளியானது
ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ
வம்ஷிதார் இயக்கியுள்ள ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ திரைப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியானது.
லைகர்
விஜய் தேவரகொண்டா நடித்த லைகர் திரைப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகிறது.
செல்வம்
மீண்டும் அரசியலுக்கு வருவீங்களா? வடிவேலு பதில்!
என்ஐஏ சோதனை – பிஎஃப்ஐ ஸ்டிரைக் : அரசு பேருந்துகள் மீது தாக்குதல்!
Comments are closed.