சாகுந்தலம் முதல் ருத்ரன் வரை: தமிழ் புத்தாண்டு ரிலீஸ்!

சினிமா

சாகுந்தலம்

நடிகை சமந்தா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘சாகுந்தலம்’. இந்தப்படத்தில் துஷ்யந்தனாக தேவ் மோகன், துருவ மகரிஷியாக மோகன் பாபு, அனுசுயாவாக அதிதி பாலன், பிரகாஷ்ராஜ், கௌதமி, மதுபாலா எனப் பலர் நடித்திருக்கிறார்கள்.

ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று வெளியாகிறது. மகேஷ் பாபுவை வைத்து ‘ஒக்கடு’, அனுஷ்காவை வைத்து ‘ருத்ரமாதேவி’ உட்பட தெலுங்கில் பல படங்களை இயக்கிய குணசேகரன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

திருவின் குரல்

நடிகர் அருள்நிதி தற்போது நடித்திருக்கும் படம், ‘திருவின் குரல்’. இப்படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இப்படத்தை இயக்குநர் ஹரிஷ் பிரபு இயக்கியுள்ளார்.

இதில் ஆத்மிகா கதாநாயகியாக நடிக்கிறார். செவித்திறன் குறைபாடுள்ள மனிதராக அருள்நிதி நடித்து உள்ளார். ‘திருவின் குரல்’க்ரைம் த்ரில்லர் படமாக உருவாகி உள்ளது.

சொப்பன சுந்தரி

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடித்து இருக்கும் படம், ’சொப்பன சுந்தரி’.

இப்படத்தில் லட்சுமி பிரியா சந்திரமௌலி, ரெடின் கிங்ஸ்லி, தீபா சங்கர், கருணாகரன், சுனில் ரெட்டி, அகஸ்டின் மற்றும் பிஜோர்ன் சுராவ் ஆகியோர் நடித்துள்ளனர்.

வருகிற ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டுக்கு படம் வெளியாகிறது.

this week movie release

யானை முகத்தான்

யோகி பாபு மற்றும் ரமேஷ் திலக் நடித்த ’யானை முகத்தான்’. ரமேஷ் விநாயகர் பக்தராக நடித்திருக்கிறார். ​​யோகி பாபு இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.

மலையாள இயக்குநர் ரெஜிஷ் மிதிலா தமிழில் அறிமுகமான படம் இதுவாகும். பரத் ஷங்கர் இசையமைத்துள்ள இப்படமும் வருகிற ஏப்ரல் 14 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.

this week movie release

தமிழரசன்

விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன் நடித்துள்ள படம் ‘தமிழரன்’. ‘ஜெயம்’ ரவி நடித்த ‘தாஸ்’ படத்தை இயக்கிய பாபு யோகேஸ்வரன், இதை இயக்கியிருக்கிறார். இந்த படம் வரும் ஏப்ரல் 14 அன்று வெளியாகிறது.

this week movie release

ருத்ரன்

நடிகர் ராகவா லாரன்ஸ் தனது மாஸ் அவதாரத்தை ‘ருத்ரன்’ படத்தில் காண்பிக்க காத்துக்கொண்டு இருக்கிறார். இப்படத்தின் போஸ்டரில் ‘தீமை பிறக்காது, படைக்கப்படுகிறது’ என்ற டயலாக் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

this week movie release

அறிமுக இயக்குநர் கதிரேசன் இயக்கி இருக்கும் இப்படத்தில், ப்ரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகிறது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

‘கை கட்டி வேடிக்கை பார்க்கமாட்டோம்’: ஆளுநருக்கு எதிராக முதல்வர் தனி தீர்மானம்!

ஆளுநருக்கு எதிராக தீர்மானம்: முன்பே அதிமுக வெளிநடப்பு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *