இதனால்தான் சினிமாவை விட்டு விலகினேன்: மாளவிகா ஓபன் டாக்!

சினிமா

சினிமாவை விட்டு ஏன் விலகினேன் என நடிகை மாளவிகா விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் கடந்த 1999ஆம் ஆண்டு நடிகர் அஜித் நடிப்பில் வெளியான “உன்னைத்தேடி” படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் மாளவிகா என்ற ஸ்வேதா மேனன்.

இதையடுத்து ரோஜா வனம், வெற்றிக்கொடி கட்டு, பாச கிளிகள், திருட்டுப் பயலே, வியாபாரி, திருமகன், சபரி உள்ளிட்ட பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடிகை மாளவிகா நடித்து தமிழ் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.

இந்நிலையில், கடந்த 2006ஆம் ஆண்டு இயக்குநர் மிஸ்கின் இயக்கத்தில் வெளியான “சித்திரம் பேசுதடி” படத்தில் இடம்பெற்ற “வாளமீனுக்கும், விலங்கு மீனுக்கு கல்யாணம்” என்ற பாடல் மூலம் நடிகை மாளவிகா பிரபலமானார்.

அதன் பின்னர், 2007ஆம் ஆண்டு சுமேஷ் என்பவரை மாளவிகா திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இதையடுத்து சினிமாவில் இருந்து மாளவிகா விலகினார்.

தற்போது சினிமாவில் இருந்து ஏன் விலகினேன் என நடிகை மாளவிகா விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய மாளவிகா, “எனக்கு சிறு வயதில் இருந்தே சினிமா மீது ஆர்வம் இருந்தது. இதனால்தான் மாடலிங்கில் சேர்ந்தேன். விளம்பர படங்களிலும் நடித்தேன்.

அதன் பிறகு சினிமாவிலும் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. எனக்கு 2007 ஆம் ஆண்டு திருமணம் ஆனது 2008 வரை நடித்துக் கொண்டிருந்தேன். அப்போது, நான் சினிமாவை விட்டு விலகுவேன் என்று நினைக்கவே இல்லை. திருமணத்திற்கு பிறகும் நிறைய திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தேன். ஆனால், கருவுற்றதால் சினிமாவில் நடிக்க முடியாது என்று கூறிவிட்டேன்.

ஏற்கனவே, நடிப்பதாக ஒப்புக்கொண்டு  பல படங்களுக்கு வாங்கி இருந்த சம்பள முன் பனத்தையும் திருப்பி கொடுத்துவிட்டேன். இதையடுத்து என்னால் சினிமாவில் தொடர்ந்து நடிக்க முடியாமல் சினிமாவை விட்டு விலகும் நிலைமை ஏற்பட்டது” என மாளவிகா விளக்கம் கொடுத்துள்ளார்.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

’கள்ளக்குறிச்சி சோகம் விலகும் முன்பே மற்றொரு உயிரிழப்பு’ : அன்புமணி கண்டனம்

பிரிட்டன் விருதை வென்ற தமிழ் முன்னணி நடிகரின் திரைப்படம்! – ரசிகர்கள் குஷி!

+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
1