இதுதான் ஃபைனல் கல்யாணம்!- 4வது திருமணம் செய்த பாலா உறுதி!

Published On:

| By Kumaresan M

முன்னாள் மனைவியை துன்புறுத்தியதாக கைதாகி பல சர்ச்சைகளுக்கு நடுவே நடிகர் பாலா , தனது மாமா மகளை நான்காவதாக மணமுடித்தார். மேலும், இதுதான் ஃபைனல் திருமணம் என்றும் அவர் உறுதிப்பட கூறியுள்ளார்.

தமிழில் ‘அன்பு’ உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் பாலா. இவர் இயக்குநர் ‘சிறுத்தை’ சிவாவின் சகோதரர். நடிகர் பாலா முதலில் பாடகி அம்ருதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 12 வயதில் மகள் உண்டு.  கருத்து வேறுபாடு காரணமாக அம்ருதாவுடன் விவாகரத்து பெற்றார் பாலா. அதன் பின் கடந்த 2021-ம் ஆண்டு எலிசபெத் என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டார் பாலா. இந்த திருமணமும் நிலைக்கவில்லை.

அம்ருதாவுடனான திருமணத்துக்கு முன்னதாக அவர் சந்தானா  என்ற பெண்ணுடன் பாலா வாழ்ந்ததாக கூறப்படுகிறது. சமீபத்தில்  விவாகரத்து நடைமுறைகளை மீறி தன்னை துன்புறுத்துவதாக முன்னாள் மனைவி அம்ருதா அளித்த புகாரில் பாலா கைது செய்யப்பட்டு பின்பு ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நிலையில் , தனது மாமா மகளான கோகிலாவை 4வதாக பாலா திருமணம் செய்துள்ளார். இந்த திருமணம் எர்ணாகுளம் அருகேயுள்ள கோவிலில் வைத்து நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த  திருமணம் குறித்து பாலா கூறுகையில், ‘எனக்கு 250 கோடி மதிப்புள்ள சொத்து உள்ளது. அவற்றை பாதுகாக்கவும் எனக்கு நல்ல கம்பேனியன் தேவை என்பதால் கோகிலாவை மணமுடித்தேன். இதுதான் எனது ஃபைனல் திருமணம். எனக்கு கல்லீரல் அறுவை சிகிச்சை நடந்த போது கோகிலாதான் என்னை பார்த்துக் கொண்டார் ‘என்று கூறியுள்ளார்.

பாலா குறித்து கோகிலா கூறுகையில், ‘சிறுவயதில் இருந்தே பாலாவை நேசித்து வந்ததாகவும் பல சூழல்கள் காரணமாக அப்போது சேர்ந்து வாழ முடியவில்லை . எனது டைரியில் பாலா குறித்து நான் எழுதி வைத்திருந்தேன். அதை பாலாவிடம் காட்டிய போதுதான் என்னை மணந்து கொள்ள முடிவு செய்தார்’ என்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

 மறுபடியும் தங்கம் விலை ஏறுதே… மக்கள் ஏமாற்றம்!

வைத்திலிங்கம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நிறைவு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share