இன்று உலகில் வாழும் தமிழர்கள் மத்தியில் மிக பிரபலமான சீரியலாக ஓடிக்கொண்டிருக்கிறது எதிர்நீச்சல். அதற்கு முக்கிய காரணம் சமீபத்தில் மறைந்த நடிகரும், இயக்குநருமான மாரிமுத்து தான்.
எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் எனும் கதாபாத்திரத்தில் நடித்த அவர் மக்களிடையே வலுவான தாக்கத்தை ஏற்படுத்தினார்.
தனது உடல் மொழியாலும், குரலாலும் ஏம்மா ஏய் போன்ற வசனங்களாலும் ஆதி குணசேகரனாகவே வாழ்ந்த அவர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
இந்த நிலையில் அவரது திடீர் மறைவு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதேவேளையில், ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய மாரிமுத்துவுக்கு பதில் யார் நடிக்க போகிறார் என்ற கேள்வி ரசிகர்களிடம் பலமாக எழுந்தது.
அதனைத்தொடர்ந்து எதிர்நீச்சல் டீமும் அந்த கதாப்பாத்திரத்திற்கு சரியான நடிகரை தேர்ந்தெடுக்கும் முயற்சியில் இறங்கியது.
அதில், நடிகர்கள் வேல ராமமூர்த்தி, இளவரசு, அழகம்பெருமாள் மற்றும் அருள்தாஸ் ஆகியோரின் பெயர்கள் அடிபட்டன.
இதற்கிடையே மாரிமுத்துவின் மறைவுக்கு பின் அவரின் கதாபாத்திரம் இல்லாமலேயே சீரியல் இதுவரை ஓடிக்
கொண்டிருக்கிறது.
இந்நிலையில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் ’வேல ராமமூர்த்தி’ நடித்திருப்பது உறுதியாகியுள்ளது.
இதுதொடர்பாக அவரது முகம் பாதி தெரிவது போன்ற எதிர்நீச்சல் சீரியலின் ப்ரோமோ வீடியோவை சன் டிவி இன்று வெளியிட்டிருக்கிறது.
அதில் ஆதி குணசேகரன் தம்பிகளான ஞானம், கதிர், மருமகன் கரிகாலன் ஆகியோர் அவரது எண்ட்ரிக்கு பில்டப் செய்வது போலவும், பின்னர் காரில் வந்து கெத்தாக இறங்கும் ஆதி குணசேகரனின் வருகையை கண்டு அவரது குடும்பத்து பெண்கள் அதிர்ச்சியில் உறைவது போலவும் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இன்றைய எதிர்நீச்சல் எபிசோட் களைகட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் மாரிமுத்துவின் இடத்தை வேல ராமமூர்த்தி தனது நடிப்பால் மிரட்டுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
கிறிஸ்டோபர் ஜெமா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஒரே நாளில் வெளியான இரண்டு அப்டேட்… விஜய் ரசிகர்கள் குஷி!
பாஜக அதிமுக கூட்டணி முறிவு : முற்றுப்புள்ளி வைத்த எடப்பாடி