விவாகரத்து செஞ்சு 3 வருஷம் ஆச்சு… ‘திருமகள்’ நிவேதிதா விளக்கம்!
சின்னத்திரை நடிகை நிவேதிதா சமூக வலைதளங்களில் எழுந்த சர்ச்சைகள் தொடர்பாக, விளக்கம் அளித்திருக்கிறார்.
திருமகள் தொடர் மூலம் ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமானவர் நிவேதிதா. சமீபகாலமாக இவரும், நடிகர் சுரேந்தரும் காதலிப்பதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வந்தன.
இதை உறுதிப்படுத்துவது போல நிவேதிதா-சுரேந்தர் இருவரும் ஜோடியாக சமூக வலைதளங்களில் ரீல்ஸ் மற்றும் புகைப்படங்கள் ஆகியவற்றை பதிவிட்டு வந்தனர்.
இதைப்பார்த்த ரசிகர்கள், ”உங்களுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்டதே? இப்போது இன்னொரு நடிகருடன் நெருக்கமாக புகைப்படங்களை பதிவிடுகிறீர்கள்?”, என நிவேதிதாவிடம் கேள்விகள் எழுப்பி வந்தனர்.
இந்த நிலையில் தற்போது சர்ச்சைகளுக்கு நடிகை நிவேதிதா விளக்கம் அளித்திருக்கிறார். இதுதொடர்பாக இன்று(பிப்ரவரி 7) அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ”எனக்கு விவாகரத்தாகி 3 ஆண்டுகள் ஆகின்றன.
நான் என்னுடைய காதலை கண்டுபிடித்து விட்டேன். ஸ்பெஷலான ஒருவருடன் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு முன்னேறிக் கொண்டிருக்கிறேன். உங்களுடைய ஆர்வத்தை பாராட்டுகிறேன். தயவுசெய்து அநாகரிகமான கேள்விகளை தவிர்க்கவும்,” என தெரிவித்து உள்ளார்.
முன்னதாக ‘மகராசி’ தொடரின் ஹீரோ எஸ்.எஸ்.ஆர்யனை, நிவேதிதா திருமணம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பாஜகவில் இணைந்த முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் யார் யார்?
Rose day: காதலி மனதில் இடம்பிடிக்க எந்த நிற ரோஜா கொடுக்கலாம்?