திரையங்குகளில் நாளை திருச்சிற்றம்பலம்

சினிமா

நடிகர் தனுஷ் நடித்திருக்கும் திருச்சிற்றம்பலம் திரைப்படம் நாளை (ஆகஸ்ட் 18) திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ள திருச்சிற்றம்பலம் படத்தில் ஒரு பெரிய நடிகர் பட்டாளமே நடித்துள்ளது.

குறிப்பாக நித்யாமேனன், பிரியா பவானிசங்கர், ராசிகண்ணா உள்ளிட்ட நாயகிகளும் பிரகாஷ்ராஜ், பாரதிராஜா ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் இசையமைப்பாளராக அனிருத் பணிபுரிந்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷ் உடன் அனிருத் இணைந்திருப்பதால் இவர்களுடைய கூட்டணியில் அமைந்த பாடல்களும் ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளன.

இப்படத்தின் ஆடியோ வெளியீடு ஜூலை 30 நடைபெற்றது. இந்த நிலையில் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தை படக்குழு சென்சாருக்கு அனுப்பியுள்ளது.

சென்சார் போர்டு இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதையடுத்து, இந்தப் படம் நாளை (ஆகஸ்ட் 18) திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

இதற்காக, தியேட்டர்களில் காலை சிறப்புக் காட்சிக்கும் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

முன்னர் நடிகர் தனுஷ் நடித்த ஜகமே தந்திரம், க்ரே மேன் உள்ளிட்ட சில படங்கள் இணையதளத்தில் நேரடியாக வெளியான நிலையில், திருச்சிற்றம்பலம் திரையரங்குகளில் வெளியாக இருப்பதால் தனுஷ் ரசிகர்கள் அதிக மகிழ்ச்சியில் உள்ளனர். அவரது படத்தை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

ஜெ.பிரகாஷ்

திருச்சிற்றம்பலம்: தனுஷ் கேரக்டர் என்ன?

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0