‘திருச்சிற்றம்பலம்’ இசை வெளியீட்டு விழா மேடையில் தனுஷ்- அனிருத் இருவரும் இணைந்து பாட இருக்கிறார்கள்.
’யாரடி நீ மோகினி’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குநர் மித்ரன் ஜவஹர். இவரது இயக்கத்தில் தனுஷ் மீண்டும் இணைந்திருக்கும் படம் ‘திருச்சிற்றம்பலம்’. ராஷி கண்ணா, நித்யா மேனன், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பல வருடங்களுக்குப் பிறகு தனுஷ்- அனிருத் இந்த படத்தில் இணைந்திருப்பதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். அடுத்த மாதம் 18ம் தேதி வெளியாகும் இந்த படத்திற்கான இசை வெளியீட்டு விழா இந்த மாத இறுதியில் சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நடக்க இருக்கிறது. இதற்காக நடிகர் தனுஷ் மற்றும் அனிருத் இருவரும் இணைந்து மேடையில் பாடல்களைப் பாட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.
நடிகர் தனுஷின் ‘3’ படம் மூலமாக சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். பின்பு ’மாரி’, ‘வேலையில்லா பட்டதாரி’, ‘தங்கமகன்’ உள்ளிட்ட பல படங்களில் தனுஷ்- அனிருத் இணை ரசிகர்களால் ரசிக்கப்பட்டது. இப்போது கிட்டத்தட்ட ஏழு வருடங்களுக்கு பிறகு இந்த படத்திற்காக இணைந்திருக்கிறார்கள். நேற்று மாலை தனுஷின் ‘வாத்தி’ படத்தின் டீசர் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதிரா