Third Single From LEO Release on 11th October 2023

Leo Third Single : “அன்பெனும்” பாடல் நாளை ரிலீஸ்..!

சினிமா

வரும் அக்டோபர் 19ஆம் தேதி  வெளியாக உள்ள லியோ படத்திற்கு சில பிரச்னைகளும், விமர்சனங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆடியோ லான்ச் ரத்து, ட்ரெய்லரில் கெட்ட வார்த்தை, நடன கலைஞர்கள் போராட்டம் என ரிலீஸ் தேதி நெருங்க நெருங்க படம் வெளியாகுமா? என்ற கேள்வி எழுகின்ற அளவிற்கு பிரச்னைகள் வரிசை காட்டி நிற்கிறது.

இந்த பிரச்னைகள் ஒருபுறம் இருந்தாலும் தற்போது ரசிகர்களின் மிகப்பெரிய பிரச்னை லியோ படம் LCU- வில் இணையுமா? இணையாதா? என்பது தான்.

ஆனால் இதை எதையும் பொருட்படுத்தாமல் தயாரிப்பாளர் லலித் குமாரும் இயக்குனர் லோகேஷ் கனகராஜும் படத்தின் ப்ரோமோஷன்களில் அதிகமாக கவனம் செலுத்தி வருகின்றனர்.

மேலும் தயாரிப்பாளர் லலித் குமார் லியோ படம் குறித்து ரசிகர்களிடம் பேசிய போது படத்தின் மூன்றாவது பாடல் கூடிய விரைவில் வெளியாகும் என தெரிவித்திருந்தார்.

இது குறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறிய போது மூன்றாவது பாடலாக எந்த பாடல் வெளியாகும் என்று எனக்கு தெரியவில்லை.. ஒரு வேளை அது மெலடி பாடலாக இருக்கலாம் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் லியோ படத்தில் இருந்து மூன்றாவது பாடலாக “அன்பெனும்” என்ற பாடல் நாளை (அக்டோபர் 11) வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கார்த்திக் ராஜா

விமர்சனம் : ஷாட் பூட் த்ரி!

மகளிர் உரிமைத் தொகை பயனாளிகள் எண்ணிக்கை: ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *