இந்திய ராணுவம் தீவிரவாதக்குழு – சீதாவாக நடிக்க சாய் பல்லவிக்கு கிளம்பிய எதிர்ப்பு!

சினிமா

சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்த அமரன் திரைப்படம் விரைவில் வெளியாகிறது. இந்த சமயத்தில் சாய் பல்லவியின் பழைய வீடியோ வைரலாகியுள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது.

நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் நடிப்பில் பிரம்மாண்டமாக ராமாயணம் படம் இந்தியில் உருவாகி வருகிறது. அதில், சீதாவாக நடிகை சாய் பல்லவி நடித்து வருகிறார். சமீபத்தில், பேட்டி ஒன்றில் பேசிய யஷ் முதலில் அந்த படத்தில் நானும் சாய் பல்லவியும் தான் கமிட் ஆனோம். சாய் பல்லவி தான் சீதாவாக நடிக்க வேண்டும் என்பதில் இயக்குநர் உறுதியாக இருந்தார் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், கடந்த ஜனவரி 2020  ஆம் ஆண்டு  வன்முறை பற்றி பேசிய நடிகை சாய்பல்லவி, “பாகிஸ்தான் மக்களை இந்திய ராணுவம் தீவிரவாதியாக பார்க்கிறது. பாகிஸ்தான் மக்கள் இந்திய இராணுவத்தை  பயங்கரவாத குழுவாக பார்க்கிறார்கள். என்னை பொறுத்த வரை வன்முறை என்பது எந்த வடிவில் வந்தாலும் ஏற்றுக் கொள்ள முடியாதது” என்று கூறியிருந்தார்.

தற்போது, இந்த வீடியோ மீண்டும் பரவியதையடுத்து சாய் பல்லவி சீதாவாக நடிப்பது நல்ல தேர்வு அல்ல என்று ரசிகர்கள் விமர்சித்துள்ளனர். நெட்டிசன் ஒருவர் , “இந்த கம்யூனிஸ்ட் சாய் பல்லவி ராமாயணத்தில் சீதா மாவாக நடிப்பது மிகவும் வருத்தமாக உள்ளது” என்று கண்டித்துள்ளார்.

மற்றொருவர், ‘ சாய் பல்லவி பாலிவுட் படத்தில் மாதா சீதாவாக நடிக்கிறார். இவர் ஒருமுறை காஷ்மீரில்  இந்துக்களின் இனப்படுகொலையை பசு கடத்தல்காரர்களின் படுகொலையுடன் ஒப்பிட்டார். ஜாகிர் நாயக்கின் கருத்து தாக்கத்தால் மாறியுள்ள சாய் பல்லவியின் திரைப்படத்தை பார்க்க வேண்டாம்’ என்று கூறியுள்ளார். இந்திய ராணுவம் தன் குடிமக்களை காக்கிறது. பாகிஸ்தான் ராணுவம் ஒசாமா போன்றவர்களை பாதுகாக்கிறது என்று இன்னொருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

ராமாயணா படத்தில் இருந்து சாய் பல்லவியை நீக்க வேண்டுமென்று பரவலாக கோரிக்கை எழுந்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

 ஐந்து மாவட்டங்களில் கனமழை… வார்னிங் கொடுத்த வானிலை மையம்!

இன்னும் சில வருடங்கள்… மனம் திறந்த தோனி… மகிழ்ச்சியில் மஞ்சள் படை!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
4
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *