அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியாகி ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்த படம் தெறி. இந்த படத்திற்கு பிறகு இயக்குநர் அட்லி தொடர்ந்து விஜய்யை வைத்து மெர்சல், பிகில் என அடுத்தடுத்த படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு கமர்ஷியல் இயக்குநர் என்ற இடத்தைப் பிடித்தார்.
அதனைத் தொடர்ந்து சமீபத்தில் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஹிந்தியில் வெளியான ஜவான் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று 1,000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து இந்திய திரை உலகையே பிரமிக்க வைத்தது. இந்நிலையில், தற்போது இயக்குநர் அட்லி ஹிந்தியில் இயக்குநராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார்.
தெறி படத்தின் ஹிந்தி ரீமேக்கில் பாலிவுட் நடிகர் வருண் தவான் ஹீரோவாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் இணைந்துள்ளார். இந்த படம் வருண் தவானின் 18 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், அட்லியின் ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ், சினி ஒன் ஸ்டுடியோஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது. தமிழில் நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான கீ படத்தை இயக்கிய காளீஸ் VD18 படத்தை இயக்குகிறார்.
இன்று (ஜனவரி 14ஆம் தேதி) இந்த படத்தின் பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் வருண் தவான், நடிகை கீர்த்தி சுரேஷ், இயக்குநர் அட்லி, அட்லியின் மனைவி பிரியா மற்றும் பலர் கலந்து கொண்டனர். விரைவில் VD18 படத்தின் தலைப்பு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ராகுல்காந்தியின் ‘இந்திய ஒற்றுமை நீதிப் பயணம்’ தொடங்கியது!
யாரும் வகுப்பெடுக்க தேவையில்லை: அண்ணாமலைக்கு தமிழக அரசு பதிலடி!