விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவரும் தங்களது குழந்தைகளான உயிர் மற்றும் உலக்-உடன் ஹாங்காங்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். சுற்றுப்பயணத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோக்கள், புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆகி வருகிறது.
இந்நிலையில், 12 வருடங்களுக்கு முன்பு படபிடிப்பிற்காக சிம்புவுடன் வந்த அதே இடத்தில் தற்போது நயன்தாரா மற்றும் குழந்தைகளுடன் வந்துள்ளதாக இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இயக்குநர் விக்னேஷ் சிவன் முதன்முதலில் இயக்கிய படம் “போடா போடி”. இந்த படத்தில் சிம்பு, வரலெட்சுமி ஆகியோர் நடித்திருப்பார்கள். படத்தின் ஒரு பாடலின் படப்பிடிப்பு ஹாங்காங்கில் உள்ள டிஸ்னிலேண்ட் என்ற இடத்தில் நடைபெற்றது.
இந்நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவன் வெளியிட்ட பதிவில், “கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு படப்பிடிப்பு நடத்த பெர்மிஷன் வாங்க வந்தபோது கையில் 1000 ரூபாய் மட்டுமே இருந்தது.
ஆனால், இன்று அதே ஹாங்காங் டிஸ்னிலேண்ட் பகுதிக்கு எனது மனைவி நயன்தாரா மற்றும் குழந்தைகளுடன் வந்திருப்பது இனிமையான தருணம். எனது மனம் திருப்தியாக உள்ளது” என்றும் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இறுதிக்கட்ட நாடாளுமன்றத் தேர்தல் – 1 மணி நிலவரம்!
எதையும் சந்திக்க தயார்?: பூத் ஏஜெண்ட் கூட்டத்தை தொடர்ந்து ஆர்.எஸ்.பாரதி பேட்டி!