நடிகர் விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த தளபதி 68 படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் புத்தாண்டை முன்னிட்டு நேற்று மாலை வெளியானது.
அதில் வயதான மற்றும் இளமையான என இரட்டை வேடத்தில் விஜய் பைலட் உடையில் நடந்து வருவது போன்ற புகைப்படத்துடன், G.O.A.T (THE GREATEST OF ALL TIME) என்ற படத்தின் டைட்டிலும் போஸ்டரில் இடம்பெற்றிருந்தது.
மேலும் விஜய்யின் G.O.A.T படத்தை தனது வழக்கமான பாணியில் “A Venkat Prabhu Hero” என்று குறிப்பிட்டிருந்தார் இயக்குநர் வெங்கட்பிரபு. புத்தாண்டை முன்னிட்டு திட்டமிட்டபடி வெளியான இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி தனது எக்ஸ் பக்கத்தில், “காலை வணக்கம் இயக்குனர் சார்… நேற்றிரவு G.O.A.T பார்ட்டி எப்படி இருந்தது?” என கேள்வியெழுப்பி இருந்தார்.
அதற்கு பதிலளித்துள்ள வெங்கட் பிரபு, “அற்புதமாக இருந்தது மேடம்! ஆனா பார்ட்டி இன்னும் முடிவடையவில்லை” என குறிப்பிட்டிருந்தார்.
இந்த பதிலைக் கேட்ட ரசிகர்கள், அப்படியென்றால் G.O.A.T செகண்ட் லுக் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பிய நிலையில், ”ஆம் #TheGOAT2ndLook இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது! பார்ட்டி தொடர்கிறது!” என ட்வீட் செய்துள்ளார்.
ஏற்கெனவே விஜயின் டபுள் ஆக்சன், மாஸ் டைட்டில் பர்ஸ்ட் லுக்கில் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது செகண்ட் லுக்கை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
புத்தாண்டு தினத்தில் ரசிகர்களை வேதனையில் ஆழ்த்திய வார்னர்
சீறிப்பாய்ந்தது பி.எஸ்.எல்.வி-சி58 : புத்தாண்டில் இஸ்ரோ சாதனை!