‘தலைவர் 171’ பட டைட்டில் டீசர் ரிலீஸ்… லோகேஷ் வைத்த ட்விஸ்ட்!

Published On:

| By christopher

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தலைவர் 171’ படத்தின் டைட்டில் டீசர் நாளை (ஏப்ரல் 22) வெளியாகிறது.

மாநகரம், கைதி, மாஸ்டர், லியோ படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக ரஜினியை வைத்து படம் இயக்குகிறார் என்ற அறிவிப்பு வெளியானதில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த நிலையில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் டீசர் நாளை மாலை 6 மணிக்கு வெளியிடப்பட உள்ளதாக படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும் இதுதொடர்பாக பதிவிட்டுள்ள லோகேஷ் கனகராஜ், நாளை மாலை 6 மணி முதல் D.I.S.C.O என தெரிவித்துள்ளார். இதன்மூலம் படத்தின் பெயரோ அல்லது ரஜினியின் பெயரோ ’டிஸ்கோ’ என இருக்கலாம் என கணித்து வருகின்றனர்.

‘தலைவர் 171’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சண்டைப் பயிற்சியாளராக அன்பறிவு பணியாற்றுகிறார்.

முன்னதாக ரஜினியின் ‘பர்ஸ்ட் லுக்’ போஸ்டர் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியானது. அதில் ரஜினி தனது கைகளில் தங்க கடிகார கை விலங்கு அணிந்து இருந்தார். அந்த போஸ்டர் ரசிகர்களிடம்  மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.

மேலும் இந்த படத்தில் ரஜினி கேங்ஸ்டராக நடிப்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளதும் அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

ரஜினிகாந்தின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘ஜெயிலர்’ திரைப்படம் வசூலில் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்தது. இந்த நிலையில், த.செ. ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘வேட்டையன்’ படம் விரைவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

தவிக்கும் பயணிகள்… ராகுல் குற்றச்சாட்டு : தெற்கு ரயில்வே உத்தரவு!

KKRvsRCB : ஸ்ரேயாஸ் அரைசதம்… பெங்களூரு அணிக்கு இமாலய இலக்கு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel