மாமன்னன் படத்திலிருந்து வடிவேலு பாடிய ‘ராசா கண்ணு’ பாடல் இன்று(மே19) வெளியாகியுள்ளது.
பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் மாமன்னன்.
இந்தப்படத்தில் வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. அண்மையில் இப்படத்தின் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், ஏ.ஆர். ரகுமான் இசையில் , யுகபாரதியின் வலி மிகுந்த வார்த்தைகளை மிகவும் உருக்கமாக வடிவேலு பாடிய ‘ராசா கண்ணு’ பாடல் இன்று (மே19) வெளியாகியுள்ளது.
ராசா கண்ணு பாடலிற்கு கமெண்ட் செய்யும் ரசிகர்கள் வடிவேலுவின் குரல் நெகிழ வைப்பதாகவும், ரஹ்மானின் இசை மனதை வருடும் வகையில் அமைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், சிலர் இந்த பாடல், கர்ணன் படத்தில் வரும் “கண்டா வரசொல்லுங்க” பாடல் போன்ற உணர்வை தருவதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
அரசு மருத்துவமனை : நொந்து போய் பேசிய முதல்வர் ஸ்டாலின்
மரக்காணம் : உடல்களுக்கு மத்தியில் பாக்கெட் சாராயம் விற்பனை!