சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

சந்திரமுகி 2 படத்தின் 3-ம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகப் படக்குழு இன்று (பிப்ரவரி 23 ) அறிவித்துள்ளது.

சந்திரமுகி படத்தின் முதல் பாகம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது பிரம்மாண்டமாகத் தயாராகி வருகிறது. தமிழில் முதல் பாகத்தை இயக்கிய இயக்குநர் பி.வாசு தான் இரண்டாவது பாகத்தையும் தற்போது இயக்கி வருகிறார்.

ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் வடிவேலு நடிக்கிறார்.

நடிகை கங்கனா ரனாவத், ராதிகா, மகிமா நம்பியார், சிருஷ்டி டாங்கே, லட்சுமி மேனன், ரவிமரியா, உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்துள்ளனர். லைகா நிறுவனம் இந்த படத்தைத் தயாரிக்க, எம்.எம் கீரவாணி இசையமைக்கிறார்.

The shooting of chandramukhi 2

இந்நிலையில் சந்திரமுகி 2 படத்தின் 3-ம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகப் படக்குழு இன்று அறிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவினர் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

மு.வா.ஜெகதீஸ் குமார்

பிஎஸ்என்எல் டூ ஜியோ: 38 ஆயிரம் இணைப்புகளை மாற்றிய கர்நாடகா காவல்துறை!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: உயர்நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி முறையீடு!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts