பொங்கல் திருநாளையொட்டி (2024) சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான், ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடித்திருக்கும் லால்சலாம், தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர், சுந்தர் சி நடித்து இயக்கியுள்ள அரண்மனை 4, விஜய்சேதுபதி கத்ரினா கைஃப் ஆகியோர் நடித்த இந்திப்படமான மேரி கிறிஸ்துமஸ் ஆகிய படங்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. lal salaam postponed from pongal release
ஐந்து பெரிய நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாவது திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் வணிக ரீதியிலான விவாதங்களை ஏற்படுத்தியது.
தமிழ்நாட்டில் 1,100 திரையரங்குகள் உள்ளது. இவற்றை ஐந்து படங்களுக்கும் எவ்வாறு ஒதுக்கீடு செய்வது என்கிற குழப்பமான மனநிலையில் திரையரங்கு உரிமையாளர்கள் விவாதித்து வந்தனர்.
வெளியேறிய லால்சலாம், அரண்மனை 4
இந்தநிலையில், ரஜினிகாந்த் நடித்துள்ள லால்சலாம் மற்றும் சுந்தர் சி நடித்து இயக்கியுள்ள அரண்மனை 4 ஆகிய இரண்டு படங்கள் பொங்கல் வெளியீட்டிலிருந்து பின் வாங்கிவிட்டன.
லால் சலாம் படம் பின்வாங்கியதை தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்சன்ஸ் நேரடியாகச் சொல்லாமல் மறைமுகமாக அறிவித்திருக்கிறார்கள்.
லைகா வெளியிட்ட அறிவிப்பில், “ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அருண்விஜய் கதாநாயகனாக நடித்துள்ள மிஷன் சாப்டர் 1 படத்தை 2024 பொங்கல் தினத்தன்று வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறோம்” என்று தெரிவித்துள்ளது.
இதன் மூலம் லால் சலாம் பொங்கலுக்கு வெளியாகாது என்பதை அந்நிறுவனமே சொல்லிவிட்டது என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அரண்மனை-4 அறிவிக்கப்படவில்லை என்றாலும் அந்தப் படத்தை தமிழ்நாட்டில் வெளியிடும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் தொடக்கத்தில் இருந்தே அந்தப் படத்தை பொங்கல் வெளியீட்டுக்கான படங்களின் பட்டியலில் துருப்பு சீட்டாகவே வைத்திருந்தனர். தற்போது பொங்கலுக்கு அரண்மனை – 4 ரிலீஸ் ஆகாது என ரெட் ஜெயண்ட்ஸூக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஜினிகாந்த் அதிருப்தி!
லால் சலாம் பின்வாங்குவதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், படத்தில் ரஜினிகாந்த் நடித்த காட்சிகள் பதிவாகாமல் போனதால் அக்காட்சிகளைத் திரும்ப எடுக்கவேண்டியுள்ளதால் படம் தாமதமாகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், முழுமையாகத் தொகுக்கப்பட்ட படத்தை ரஜினிகாந்த் பார்த்திருக்கிறார். அவருக்குப் படத்தில் திருப்தி இல்லையாம்.
அதனால் படத்தில் பல திருத்தங்களைச் செய்ய அறிவுறுத்தினாராம். அதை ஏற்று அதற்கான வேலைகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகிறார்களாம். இதையும் வேகமாகச் செய்து முடித்து பொங்கலில் படத்தை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள்.
ஆனால் அவர்கள் நினைத்தபடி பணிகள் நிறைவடையாது என்பதால் பட ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது என்கிறார்கள் லால் சலாம் படத்தில் பணியாற்றியவர்கள்.
தனுஷுக்கு போட்டியாக வேண்டாம்!
மேலும், அவர்கள் கூறும்போது, “லால்சலாம் பொங்கலுக்கு வராது என்பதை பல கட்ட உறுதிப்படுத்தலுக்கு பின்னரே கேப்டன் மில்லர் பொங்கல் வெளியீடு என்று அறிவிக்க தனுஷ் ஒப்புக் கொண்டார் என்கிற தகவல் ரஜினிகாந்த்துக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதனை அவரும் நேரடியாக பேசி உறுதிப்படுத்திக்கொண்ட பின் லால் சலாம் படம் கேப்டன் மில்லர் படத்துக்கு போட்டியாக வர வேண்டாம் என கூறியிருக்கிறார்.
ஆனால் படத்தின் இயக்குநரான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பொங்கல் வெளியீடு என்பதில் பிடிவாதமாக இருந்ததுடன் இறுதிக்கட்ட பணிகளை துரிதப்படுத்துமாறு கூறியுள்ளார்.
இதனை அறிந்த ரஜினிகாந்த், படக்குழுவினரிடம் லால் சலாம் பொங்கலுக்கு வரக்கூடாது. அதனால் பணிகளை தாமதப்படுத்துமாறு அதிகாரபூர்வமற்ற வகையில் கூறியுள்ளார்.
அதனால் லைகா நிறுவனம் ஏற்கெனவே வாங்கி வைத்திருந்த மிஷன் சாப்டர் 1 படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறது.
லால்சலாம் படத்தை தமிழ்நாடு திரையரங்குகளில் வெளியிடும் உரிமை ரெட்ஜெயண்ட் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
அந்நிறுவனம் தொடர்ச்சியாகப் படங்களை வெளியிட்டு வருவதால் தமிழ்நாடு முழுக்க ஏராளமான திரையரங்குகள் அந்நிறுவனத்தின் படங்களை வெளியிட முன்னுரிமை கொடுத்து வருகின்றன.
அவர்களுக்கு புதிய படம் ஒன்றைக் கொடுத்தாக வேண்டும் என்பது ரெட் ஜெயண்ட்டின் நிலை. அதனால் அந்நிறுவனத்தின் அறிவுறுத்தல் அடிப்படையில் மிஷன்சாப்டர்1 படத்தை வெளியிட லைகா நிறுவனம் முடிவெடுத்திருக்கிறது என்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இராமானுஜம்
”துரோகம் செய்ய நினைத்தால் வாழ முடியாது” : ஜெயக்குமார்
கடலூர்: சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு!
மீண்டும் கொரோனா: அதிக பாதிப்புக்குள்ளான மாநிலம் எது?
lal salaam postponed from pongal release
Comments are closed.