ஜெயிலர் திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜெயிலர். இந்தப்படத்தில் தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஜெயிலர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இச்சூழலில் கடந்த ஜூலை 6 ஆம் தேதி இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடலான ’காவாலா ’பாடல் வெளியானது.
இதில் நடிகை தமன்னா நடனம் ஆடியிருப்பார்.
இந்த பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இந்த பாடல் நடிகை சிம்ரன் , சமந்தா, நயன்தாரா, கத்ரினா கைஃப், மாளவிகா மோகனன், கியாரா அத்வானி, ஹன்சிகா மோத்வானி உள்ளிட்டோர் நடனமாடும் வகையில் சித்தரிக்கப்பட்டு ஆர்டிஃபிஷியல் இன்டலிஜன்ஸ் (Artificial intelligence) தொழில்நுட்பத்திலும் வெளியானது.
இந்நிலையில், இன்று (ஜூலை 14) ஜெயிலர் திரைப்படத்தின் புதிய போஸ்டரை அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.
Muthuvel Pandian's countdown starts🔥 #Jailer releasing Worldwide on Aug 10th 💥@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @Mohanlal @NimmaShivanna @bindasbhidu @tamannaahspeaks @meramyakrishnan @suneeltollywood @iYogiBabu @iamvasanthravi @kvijaykartik @Nirmalcuts… pic.twitter.com/hqsDv7D95I
— Sun Pictures (@sunpictures) July 14, 2023
இது தொடர்பாக சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், முத்துவேல் பாண்டியன் கவுண்டவுன் ஸ்டார்ட் என்று கூறியுள்ளது. மேலும், ஜெயிலர் திரைப்படத்தின் இரண்டாம் பாடல் ஜூலை 17 ஆம் தேதி வெளியாகும் என்றும் கூறியுள்ளது. இதை தற்போது ரஜினி ரசிகர்கள் சமூக வலைதள பக்கங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
மாவீரன்: ட்விட்டர் விமர்சனம் இதோ!