தி காஷ்மீர் ஃபைல்ஸ் விவகாரம்: மன்னிப்பு கேட்கிறேன்-ஆனால்? நாடவ் லாபிட்

சினிமா

தி காஷ்மீர் ஃபைல்ஸ் குறித்த தன்னுடைய கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டு இருந்தால், முழுமையான மன்னிப்பு கோருவதாக இஸ்ரேலை சேர்ந்த இயக்குனர் நாடவ் லாபிட் தெரிவித்துள்ளார்.

கோவாவில் கடந்த நவம்பர் 20 ஆம் தேதி தொடங்கிய 53ஆவது சர்வதேச திரைப்பட விழாவில், பாலிவுட் இயக்குநர் விவேக் அக்னி ஹோத்ரியின் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ் ’ திரைப்படம் இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் ‘பனோரமா’ பிரிவில் திரையிடப்பட்டது.

இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் இறுதி நிகழ்ச்சியில் பேசிய இஸ்ரேலிய இயக்குநரும், நடுவர் குழு தலைவருமான நாடவ் லாபிட்,

“தி காஷ்மீர் ஃபைல்ஸ் ’ திரைப்படம் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பிரசார நோக்கிற்காக தயாரிக்கப்பட்ட இழிவான ஒன்று” என்று கடுமையாக விமர்சித்தார்.

நாடவ் லாபிட்டின் இந்த கருத்து தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

சமூக வலைதளங்களில் அவருக்கு கடும் கண்டனங்கள் குவிந்த நிலையில், இதுதொடர்பாக இஸ்ரேல் சார்பில் வருத்தமும் தெரிவிக்கப்பட்டது.

ஆனாலும், நாடவ் லாபிட்டின் கருத்திற்கு தொடர்ந்து தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தின் இயக்குனர், நடிகர்கள் என பலரும் எதிர்ப்பையும், விமர்சனங்களையும் முன்வைத்தனர்.

மன்னிப்பு கோரிய நாடவ் லாபிட்

இந்நிலையில், தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தின் மீதான தனது கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டு இருந்தால், அதற்காக முழு மன்னிப்பு கோருவதாக நாடவ் லாபிட் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில்,

The Kashmir files Affair Sorry But Nadav Lapid

பாதிக்கப்பட்டவர்கள் அல்லது காஷ்மீரி பண்டிட்களை அவமதிப்பது எனது நோக்கமல்ல. எனது கருத்துகள் யாரையாவது புண்படுத்தி இருந்தால் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்.

அதேநேரம், நான் சொன்னது அனைத்தும் உண்மை. எனக்கும் என் சக தேர்வுக்குழு உறுப்பினர்களுக்கும், தி காஷ்மீர் ஃபைல்ஸ் ஒரு மோசமான பரப்புரை திரைப்படமாகும். இது ஒரு மதிப்புமிக்க போட்டிப் பிரிவுக்கு இடமில்லாதது மற்றும் பொருத்தமற்றது. அதை மீண்டும் மீண்டும் கூறுவேன்.

எனது கேள்வி என்ன?

இந்தத் திரைப்படம் ஒரு சித்தரிக்கப்பட்ட மோசமான வன்முறையைப் பயன்படுத்தியது என்று நாங்கள் அனைவரும் நினைத்தோம்.

விரோதம், வன்முறை மற்றும் வெறுப்பை பரப்பும் வகையில் தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் கோபத்தில் இருக்கிறார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். என் படத்தைப் பற்றி யாராவது அப்படிப் பேசினால் நானும் கோபப்படுவேன். எனது படங்கள் பெரும்பாலும் சர்ச்சைக்குரியதாகவே பார்க்கப்படுகின்றன.

ஆனால், உண்மைகள் என்ன என்பதுதான் எனது கேள்வி, தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத் தயாரிப்பாளருக்கு நன்றாகத் தெரியும் என, கோவா திரைப்பட தேர்வுக்குழு தலைவர் நாடவ் லாபிட் விளக்கமளித்துள்ளார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

குஜராத்தில் குறைந்த வாக்குப்பதிவு!

+1
0
+1
1
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.