‘தி க்ரேமேன்’ படத்தில் வாய்ப்பு கிடைத்தது எப்படி?

சினிமா

ரூஸோ பிரதர்ஸ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் ‘தி க்ரேமேன்’ படத்தில் தனக்கு வாய்ப்பு வந்தது பற்றி பகிர்ந்திருக்கிறார்.

ஹாலிவுட் இயக்குநர்களான ரூஸோ பிரதர்ஸ் இயக்கி இருக்கக்கூடிய படம் ‘தி க்ரேமேன்’. தனுஷ் இந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படத்தின் டிரெய்லர் வெளியான நிலையில் வரும் ஜூலை 22இல் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் அமெரிக்க ஊடகங்களுக்குப் படம் திரையிடப்பட்டு, பின்பு இந்தப் படத்தின் நடிகர்களுடன் கலந்துரையாடல் நடந்தது. இதில் தனுஷின் பேச்சும் அவரது நகைச்சுவையும் ரசிக்கப்பட்டதாகவும் செய்திகள் வந்தன.

இதில் நடிகர் தனுஷிடம் இந்தப் படத்தில் நடிப்பதற்கு எப்படி வாய்ப்பு கிடைத்தது எனக் கேட்கப்பட்டது. அதற்கு தனுஷ் கூறியிருப்பதாவது, ‘நான் எப்படி இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தமானேன் என்றே தெரியவில்லை. ஒரு நாள் திடீரென ஒரு காஸ்டிங் ஏஜென்சியில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அவர்கள், ஹாலிவுட் புராஜெக்ட் ஒன்று இருப்பதாகத் தெரிவித்தார்கள். என்ன படம் என்று விசாரித்த போது, அவர்கள் கூறிய தகவல் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. உடனே மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் படத்துக்கு ஒப்புக்கொண்டேன். இதுமட்டுமல்லாமல், நான் நிறைய கற்று கொள்வதற்கான வாய்ப்பாகவும் இது அமையும் என எதிர்ப்பார்த்தேன். அது நிறைவேறியதில் மகிழ்ச்சி’ என்று பேசி இருக்கிறார்.

அவெஞ்சர்ஸ்ஸின் ‘இன்ஃபினிட்டி வார்’, ‘எண்ட் கேம்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ரூஸோ பிரதர்ஸ்தான் இந்தப் படத்தையும் இயக்கி இருக்கிறார்கள். எழுத்தாளர் மார்க் கிரேனியின் ‘தி கிரே மேன்’ நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதிரா

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *