தமிழ் திரையுலகம் ஆவலுடன் எதிர்பார்த்த நடிகர் விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள GOAT திரைப்படம் இன்று (செப்டம்பர் 5) உலகளவில் வெளியாகியுள்ளது. படத்தில் 90ஸ் பிரபலங்களான சினேகா, பிரசாந்த், பிரபுதேவா உள்ளிட்டோரும், மீனாட்சி சவுத்ரி, அஜ்மல், பிரேம்ஜி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் முதல் காட்சி 9 மணி என்ற போதிலும், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் காலை 4 மணி முதலே GOAT திரைப்படத்தின் முதல் காட்சிகள் ஆரம்பமானது.
எனினும் தமிழகத்திற்கு இணையாக கேரளா, கர்நாடகாவிலும் GOAT படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், தமிழ்நாட்டிலும் பாசிட்டிவ் விமர்சனத்துடன் ரசிகர்கள் படத்தை கண்டுகளித்து வருகின்றனர்.
படத்தில் விஜயின் டபுள் ஆக்சன், த்ரிஷா, சிவகார்த்திகேயன் ஆகியோரின் கேமியோ, அதிரடியான கிளைமாக்ஸ் காட்சி என ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது.
அதேவேளையில் படத்தின் நீளம், தேவையில்லாத பாடல் எனவும் எதிர்மறையான விமர்சனங்களாக ரசிகர்கள் முன்வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் எக்ஸ் தள பக்கத்தில் GOAT படம் குறித்த ரசிகர்களின் விமர்சனத்தை இங்கு காணலாம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையம்: மோடி அறிவிப்பு!
விஜய் பட பெயரில் சனாதனம்?: ரவிக்குமாரின் பதிவுக்கு தமிழிசை பதில்!
பெற்றோருடன் இணக்கம்…மனைவியுடன் நெருக்கம்… விஜய் குடும்பத்துடன் படம் பார்த்த பின்னணி!