சினிமாவில் நடிகைகளுக்கு மட்டுமே அட்ஜெஸ்ட்மென்ட் பிரச்சனை நடைபெற்று வருவதாக பல்வேறு நடிகைகளும் கூறி வரும் நிலையில், சில நடிகர்களும் இது போன்ற சிக்கலில் சிக்கியுள்ளதாக கூறிவருகின்றனர்.
பீதாம்பர் என்ற திரைப்படத்தின் மூலம் 1992 ஆம் ஆண்டு இந்தி சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ரவி கிஷன். போஜ்புரி மொழியிலும் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
உத்தரபிரதேசம் மாநிலம் கோராக்பூர் தொகுதியில் தற்போது பாஜக எம்.பி யாக இருக்கும் இவர், கடந்த மார்ச் 26 ஆம் தேதி India Tv யின் ’Aap Ki Adalat’ நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டியில், தனக்கு Casting Couch பிரச்சனை ஏற்பட்டதாக கூறி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார்.
மேலும், அப்படி செய்தது ஒரு பிரபல நடிகை என்றும் கூறியிருப்பது தான் திரைத்துறையையே ஷாக் ஆக்கி உள்ளது.
சினிமா நடிகைகள், சின்னத்திரை நடிகைகள் உள்ளிட்ட பலரும் வாய்ப்புக்காக அட்ஜெஸ்ட்மென்ட் பிரச்சனையை சந்தித்து வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை வைத்து வரும் நிலையில், பெண்களுக்கு தான் சினிமாவில் இது போன்று பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் தொல்லைகள் இருப்பதாக பார்த்தால் நடிகர்களுக்கும் சினிமா ஹீரோயின்களே டார்ச்சர் கொடுப்பதாக திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார் ரவி கிஷன்.
அந்த நிகழ்ச்சியில் ரவி கிஷன் பேசியதாவது, “ஒரு படத்தில் நடிப்பதற்காக ஆரம்ப காலக்கட்டத்தில் தேர்வான போது, எல்லாம் ஓகே ஆகி விட்டது. இன்னும் இரண்டு நாட்களில் படப்பிடிப்பு ஆரம்பமாக போகிறது.
அப்போது திடீரென அந்த பெண் பிரபலம் எனக்கு போன் பண்ணி நைட் காபி குடிக்க வறீங்களான்னு கேட்டார். பொதுவாகவே காபியை பகலில் தானே குடிக்க அழைப்பார்கள். அதுவும் சாதாரண நடிகர் என்னை இப்படி அந்த நடிகை அழைத்ததும் விஷயத்தை புரிந்து கொண்டு வேண்டாம் என மறுத்தேன்.

ஆனால், அந்த நடிகை விடாமல் என்னை டார்ச்சர் செய்தார். என் அப்பா என் கிட்ட குறுக்கு வழியில போய் எப்போதுமே சம்பாதிக்கக் கூடாது. அப்படி சம்பாதித்தால் அது நிலைக்காது எனக் கூறியது தான் நினைவுக்கு வந்தது.
அந்த நடிகையின் இச்சைக்கு சம்மதிக்காத நிலையில், அந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டேன். அப்போது தான் எல்லா விஷயமும் முழுமையாக எனக்கு புரிந்தது” என்று கூறியுள்ளார்.
அந்த பெண் பிரபலம் யார் என்கிற கேள்வியை தொகுப்பாளர் திடீரென எழுப்ப, வேண்டாம் அவர் பெயர் சொல்ல விரும்பவில்லை. இப்போது அவர் மிகப்பெரிய பிரபலம் என ரவி கிஷன் மறுத்து விட்டார்.
தற்போது அந்த பிரபல நடிகை யார் என்ற கேள்வியைத்தான் நெட்டிசன்கள் சமூகவலைதளங்களின் மூலம் கேட்டு வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பாலிவுட் நடிகரும் தீபிகா படுகோனேவின் கணவருமான ரன்வீர் சிங் இது போன்ற ஒரு சம்பவத்தை சர்வதேச பத்திரிகையான Deadline க்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
ஜெயிக்கப்போவது யார்?: ராஜாவா? ரஹ்மானா?
மதுப்பழக்கமே இல்லாதவர் மது அருந்தியதாக கூறிய விவகாரம்: போலீஸ் விளக்கம்!