இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாகத் திகழ்ந்து வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராய்.
மணிரத்னம் இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த இருவர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஐஸ்வர்யா ராய் ஜீன்ஸ் , கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் போன்ற திரைப்படங்களில் நடித்தார்.
பல வருடங்களுக்குப் பிறகு ஐஸ்வர்யா ராய் தமிழில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். கடைசியாக எந்திரன் திரைப்படத்தில் ரஜினியுடன் ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார்.
இந்நிலையில் , தொடர்ந்து நடிகை ஐஸ்வர்யா ராய் போலவே காணப்படும் நிறைய நபர்களின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருவதைப் பார்த்து இருக்கிறோம்.
அப்படி தற்போது ஒரு இளம் பெண்ணின் வீடியோ இணையத்தில் வைரலாகி இருக்கிறது.
இந்தூரைச் சேர்ந்த ஆஷித்தா சிங் என்ற 25 வயது இளம் பெண் பார்ப்பதற்கு அப்படியே நடிகை ஐஸ்வர்யா ராய் போலவே இருக்கிறார்.
சமூக வலைதளத்தில் நடிகை ஐஸ்வர்யா நடித்த வசனங்கள் எல்லாம் வீடியோஸ் வெளியிட்டுவருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் ஆஷித்தா சிங்கை சுமார் 2.50 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். இதுவரை இவர் 1, 738 வீடியோக்களுக்கும் மேல் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இவருடைய வீடியோக்கள் 1 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று வருகிறது.
இவருடைய பதிவுக்குப் பலரும், ’நீங்கள் அப்படியே அச்சு அசலாக ஐஸ்வர்யா ராய் மேம் மாதிரியே இருக்கிங்க’ என்றும் ’ நீங்கள் தான் எட்டாவது அதிசயம்’ என்றும் புகழ்ந்து வருகின்றனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
கவனம் ஈர்க்கும் த்ரிஷா ஐஸ்வர்யா ராய்: பொன்னியின் செல்வன் டீசர்!