The Chief Minister consoled Vadivelu

வடிவேலுவுக்கு முதல்வர் சொன்ன ஆறுதல்!

சினிமா

நகைச்சுவை நடிகர் வடிவேலு தாயார் காலமான நிலையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவருக்கு தொலைபேசி வாயிலாக ஆறுதல் தெரிவித்துள்ளார்.

மதுரை விரகனூரில் வசித்து வந்த நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி (எ) பாப்பா (87) நேற்று இரவு உடல்நல குறைவால் காலமானார்.

இது குறித்து தெரிவித்த நடிகர் வடிவேலு, தாய் சரோஜினி கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக மதுரை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகக் கூறினார்.

தனது தாய் மறைவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் போனில் ஆறுதல் தெரிவித்ததாக வடிவேலு தெரிவித்துள்ளார்.

மேலும் முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “நடிகர் வடிவேலு அவர்களின் அன்புத்தாயார் சரோஜினி அம்மாள் என்கிற பாப்பா அவர்கள் மதுரை விரகனூரில் உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.

ஆளாக்கி அழகு பார்த்த அன்னையின் மறைவு என்பது எந்த ஒரு மகனுக்கும் ஈடு செய்ய இயலாத இழப்பாகும். ‘வைகைப் புயல்’ வடிவேலு அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோன்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் உள்ளிட்ட அரசியல் கட்சித்  தலைவர்கள், திரைப் பிரபலங்கள் தொலைபேசி வாயிலாக ஆறுதல் தெரிவித்து உள்ளனர்.

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மதுரையில் காலமான நடிகர் வடிவேலுவின் தாயார் உடலுக்கு திரை பிரபலங்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கலை.ரா

வடிவேலு வீட்டில் திடீர் சோகம்!

ஈரோடு: இரவோடு இரவாக தலைவர்கள் சிலைகள் மூடல்!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *