கடைசி வரை வாய் மூடி மவுனம்… நன்றி கூறி வெளியேறிய மோகன்லால்… இதெல்லாம் நியாயமா லாலேட்டா?
மலையாள திரையுலகில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து ஹேமா அறிக்கையில் சுட்டி காட்டப்பட்டுள்ளது. இதையடுத்து, மலையாள நடிகர்கள் சங்கமான அம்மாவின் தலைவர் பதவியில் இருந்து மோகன்லால் விலகியுள்ளார்.
அதோடு, நிர்வாகக் குழுவும் கலைக்கப்பட்டுள்ளது. ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி பல நடிகைகள் புகார் சொன்ன போதும் கூட நடிகர் மோகன்லால் மவுனமாகவே இருந்தார்.
இந்த குற்றச்சாட்டுகள் குறித்து நடிகர் மோகன்லால் தலைவர் என்கிற ரீதியில் ஒரு வார்த்தை கூட வாய் திறந்து பேசவில்லை. இந்த நிலையில், அம்மா சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், “சமீபத்தில் பாலியல் குற்றச்சாட்டு காரணமாக பொது செயலாளர் பதவியில் இருந்து விலகிய நடிகர் சித்திக்கின் பெயரும் இடம் பெற்றுள்ளது.
அந்த அறிக்கையில் இரண்டு மாதங்களுக்குள் பொதுக்குழு கூடி புதிய நிர்வாக குழுவை தேர்வு செய்யும். அதுவரை, பழைய நிர்வாகிகளே அம்மா அமைப்பை தங்கு தடையின்றி இயங்கும் வகையில் பார்த்துக் கொள்வார்கள் .
நடிகர் , நடிகைகளுக்கு பண,மருத்துவ உதவி உள்ளிட்டவை தங்கு தடையின்றி கிடைக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது. ஹேமா அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளையடுத்து தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. எங்களை விமர்சித்த தவறை சுட்டிக்காட்டிய அனைவருக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றபடி தனிப்பட்ட முறையில் மோகன்லால் பாலியல் வன்கொடுமைகள் குறித்து எந்த கருத்தையும் முன் வைக்கவில்லை. முன்னதாக, மலையாள படவுலகில் நடிகைகளுக்கு நடக்கும் கொடுமைகள் பற்றி சூப்பர் ஸ்டார்களான மம்முட்டி, மோகன்லால் இருவருக்கும் தெரியும் என்றும் ஆனால், அதை எதிர்த்து போராடும் தைரியம் இல்லாமல் இருந்தனர் என்கிற பேச்சு அடிபட்டது உண்டு.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
கொட்டுக்காளி வசூல்… சிவகார்த்திகேயனை மறைமுகமாக சாடிய அமீர்
பின்வாங்கவே மாட்டேன்… 70 வயது எடப்பாடி பேசியது சரியா? – அண்ணாமலை ஆவேசம்!