இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் கோலார் தங்க வயல் குறித்த பின்னணியில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் தங்கலான்.
ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தங்கலான் படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் நடிகை பார்வதி, நடிகை மாளவிகா மோகனன், நடிகர் பசுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
தங்கலான் படத்தின் டீசர் வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்களை பிரமிக்க வைத்தது. சமீபத்தில் தங்கலான் படத்திற்கு விக்ரம் அவர்கள் டப்பிங் பேசிய போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது.
வரும் ஜனவரி 26 ஆம் தேதி தங்கலான் படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த தேதியில் தங்கலான் படம் ரிலீஸ் ஆகாது என்று கூறப்படுகிறது.
தங்கலான் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இன்னும் முழுமையாக முடியாததால் படத்தை மார்ச் மாதம் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கார்த்திக் ராஜா
கண்ணீருடன் திடீர் ஓய்வை அறிவித்தார் சாக்ஷி மாலிக் : ஏன்?
நெல்லை, தூத்துக்குடி மக்களுக்கு ரூ.6000 நிவாரணம்!