நடிகர் விஜய்யின் மாஸ்டர் படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன். தற்போது இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் கோலார் தங்க வயல் குறித்த பின்னணியில் பிரமாண்டமாக உருவாகியுள்ள தங்கலான் படத்திலும், மாளவிகா மோகனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தில் மாளவிகாவின் கேரக்டருக்காக மட்டும் 5 மணி நேரம் மேக் அப் போடப்பட்டதாம். தங்கலான் படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், சமீபத்தில் மாளவிகா மோகனன் தனது எக்ஸ் பக்கத்தில் #AskMalavika என்ற ஹேஸ்டேக்கின் கீழ் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வந்தார். அப்போது தங்கலான் படத்தில் அவரது கதாபாத்திரம் குறித்தும் மாளவிகா பதிலளித்துள்ளார்.
அவர் கூறியதாவது, “இதுவரை நான் நடித்த படங்களிலேயே எனக்கு மிகுந்த சவாலான கேரக்டர் தங்கலான் படத்தில் தான் அமைந்திருக்கிறது. மேலும், என் நடிப்பும், அந்த கேரக்டரும் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.
மாளவிகா மோகனனின் இந்த பதிவு தற்போது வைரலாக பரவி வருகிறது.
கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பெண் ஓட்டுநர்களுக்கு ரூ.1 லட்சம் மானியத்தில் ஆட்டோவை முதல்வர் வழங்கினார்!
“பைக்கை எரித்து விடலாம்” – டிடிஎஃப் வாசனுக்கு நீதிபதி எச்சரிக்கை!