“தங்கலான்” படத்தின் டிரைலர் வெளியீடு குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “தங்கலான்”. இந்த படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது.
“தங்கலான்” படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக இருப்பதாக தகவல் வெளியான நிலையில், தற்போது படத்தின் டிரைலர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
“தங்கலான்” படத்தின் டிரைலர் சென்சார் செய்யப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகைப்பட்ங்களும் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
இந்த படத்தின் டிரைலர் 2 நிமிடம் 12 விநாடிகள் உள்ளதாக தெரிகிறது. “தங்கலான்” டிரைலரை ஜூலை 8ஆம் தேதி வெளியிட தயாரிப்பாளர்கள் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆம்ஸ்ட்ராங் கொலை… ஆற்காடு சுரேஷ் தம்பி கொடுத்த வாக்குமூலம்!
நெருக்கமானவர்கள் மீது குறைகாணும் மனநிலை ஏன் வருகிறது?