“தங்கலான் படத்தின் மூலம் மாளவிகா யார் என்பது தெரியவரும். ஆக்சன் சீன் முழுவதும் மாளவிகா என்னோடு சிறப்பாக நடித்தார்” என்று நடிகர் விக்ரம் புகழாரம் சூட்டியுள்ளார்.
நடிகர் விக்ரம் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள தங்கலான் திரைப்படத்தின் விளம்பர நிகழ்வுகள் மெட்ரோ நகரங்களில் உள்ள தனியார் கல்லூரி வளாகங்களில் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடைபெற்ற தங்கலான் விளம்பர நிகழ்ச்சியில் நடிகர் விக்ரம், நடிகைகள் மாளவிகா மோகனன், பார்வதி மற்றும் திரைப்படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
நிகழ்வுக்கு பின் செய்தியாளர்களிடம் விக்ரம் பேசியதாவது,
“மதுரை எனக்கு சிறப்பான இடம். விடுமுறை என்றாலே எனக்கு மதுரை தான் நினைவுக்கு வரும். இந்த படத்தில் ஆங்கில நடிகர் டேனியல் படத்துக்காக உயிரை கொடுத்து நடித்தார். டேனியல் இந்தியராகவே மாறிவிட்டார்.
மாளவிகா யார் என்பது இந்த படம் மூலம் தெரியவரும். ஆக்சன் சீன் முழுவதும் மாளவிகா என்னோடு சிறப்பாக நடித்தார்.
இதேபோன்று பார்வதியும் இந்த படத்தில் எனது மனைவியாக ரொம்ப ஆர்வமாக பணிபுரிந்தார். தங்கலான் இந்திய சினிமாவுக்கு புதுவித கதையாக இருக்கும். இசையில் மக்களுக்கு புரியும் வகையில் புதிய சப்தங்கள், புதிய கருவிகளை ஜி.வி.பிரகாஷ் பயன்படுத்தியுள்ளார்.
தங்கலான் படத்தில் உலக சினிமா தரமும் நமது மண்வாசனையும் இருக்கும். அதேபோன்று இந்த படம் தேசிய அளவிலான படமாக இருக்கும்.
எந்த படம் நடித்தாலும் அதற்கு ஏற்ப மன ரீதியாக தயார்படுத்திக்கொள்வேன். அந்த கேரக்டரை உள்வாங்கி நடிகராக மாறிவிடுவேன். டப்பிங் இல்லாமல் நேரடியாக படப்பிடிப்பின் போதே பேசியது கடும் சிரமமாக இருந்தாலும் வித்தியாசமாக இருந்தது” என்று தெரிவித்தார்.
செப்டம்பர் 5 ஆம் தேதி விஜய் நடித்துள்ள தி கோட் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி தங்கலான் படம் வெளியாகிறது. இரண்டு வார காலத்தில் வசூலை குவிக்க வேண்டும் என்கிற முனைப்பில் படக்குழு தீவிரமாக விளம்பர வேலைகளை மேற்கொண்டு வருகிறது.
தங்கலான் வெளியாகும் நாளில் அருள்நிதி நடித்துள்ள டிமான்டி காலனி – 2, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள கன்னட படமான ரகுதத்தா ஆகிய படங்களும் வெளியாகின்றன.
இராமானுஜம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
முதல் நாளே இப்படியா? அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!
ஹிண்டன்பர்க் அறிக்கை… அதானி பங்குகள் கடும் சரிவு!
அரசியல் என்ட்ரி… விஜய்க்கு கனிமொழி சொன்ன அட்வைஸ்!
மலையாள படத்தில் பாரதிராஜா… ரசிகர்களுக்கு காத்திருக்கும் சஸ்பென்ஸ்!