தங்கலான் படத்தின் புது ரிலீஸ் அப்டேட் இதோ!

Published On:

| By Selvam

பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கோலார் தங்க வயல் குறித்த பின்னணியில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் தங்கலான். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தங்கலான் படத்தை தயாரித்துள்ளது.

இந்த படத்தில் நடிகை பார்வதி, நடிகை மாளவிகா மோகனன், நடிகர் பசுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

தங்கலான் படத்தின் டீசர் தமிழ் சினிமா ரசிகர்களை பிரமிக்க வைத்தது. வரும் ஜனவரி 26 ஆம் தேதி தங்கலான் படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த தேதியில் படம் ரிலீஸ் ஆகாது என்று உறுதியாகி விட்டது.

இதையடுத்து, இன்று (ஜனவரி 15) தங்கலான் படத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியாகி உள்ளது. இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை முன்னிட்டு ஒரு போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இன்னும் முழுமையாக முடியாததால், படத்தின் ரிலீஸ் ஏப்ரல் மாதத்திற்கு தள்ளிப் போனதாக கூறப்படுகிறது.

– கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி? – மாயாவதி அறிவிப்பு!

“கங்குவா” பொங்கல் ட்ரீட்: படக்குழு வெளியிட்ட அறிவிப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel