ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸ் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியான ‘தங்கலான்’ திரைப்படம் உலகளவில் நூறு கோடி ரூபாய் வசூலைக் கடந்து இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் சார்பில் இன்று (ஆகஸ்ட் 15) அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவரும், விநியோகஸ்தருமான திருப்பூர் சுப்பிரமணியம் அவர்களிடம் கேட்டபோது “அந்தப் படத்தின் முதலீட்டுடன் மொத்த வசூலை ஒப்பீட்டளவில் பார்க்கும் போது பிரம்மாண்டமான வெற்றி என கூற முடியாது” என்றார்.
160 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட தங்கலான் திரைப்படம் முதல்வாரத்திலேயே 100 கோடி ரூபாய் மொத்த வசூலை கடந்திருக்க வேண்டும். படம் வெளியான இரண்டாவது நாள் வசூல் குறைந்தது. அதில் இருந்து வார இறுதி நாட்களில் கூட மீண்டு வரவில்லை என்பதுடன் இரண்டாவது வாரம் 50% திரையரங்குகளில் படம் தூக்கப்பட்டு ‘டிமான்டி காலனி-2’, ‘வாழை’, ‘கொட்டுக்காளி’, ‘போகுமிடம் வெகு தூரமில்லை’ ஆகிய படங்கள் திரையிடப்பட்டது.
முதல் நாள் 26 கோடி ரூபாய் வசூல் என கம்பீரமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் அடுத்தடுத்த நாட்களில் மட்டுமல்ல வார கடைசியில் கூட மொத்த வசூலை அறிவிக்கவில்லை. தற்போது 14 நாட்கள் முடிவடைந்த நிலையில் உலக அளவில் 100 கோடி ரூபாய் மொத்த வசூல் என ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் இன்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இராமானுஜம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
“முதலீட்டுக்கான ஒரே சாய்ஸ் தமிழ்நாடு” – அமெரிக்காவில் தமிழில் முழங்கிய ஸ்டாலின்
ஃபார்முலா 4 கார் ரேஸ் : சென்னை போக்குவரத்தில் 3 நாட்களுக்கு முக்கிய மாற்றங்கள்!