இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில், நேற்று (ஆகஸ்ட் 15 ) வெளிவந்த ‘தங்கலான்’ திரைப்படம் உலகளவில் முதல் நாளில் ரூ.26.44 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி முதலானோர் நடிப்பில், நேற்று வெளியான திரைப்படம் ‘தங்கலான் ‘. இந்தத் திரைப்படம் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றாகும்.
நேற்று வெளியான முதல் காட்சியில் இருந்தே திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. விமர்சகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் இருந்து வந்தாலும் விக்ரமின் நடிப்பு, ஜீவி பிரகாஷின் இசை , பா.இரஞ்சித்தின் புதிய முயற்சி ஆகியவற்றை விமர்சகர்கள் பாராட்டத் தவறவில்லை.
இந்த திரைப்படம் முன்பதிவில் மட்டுமே 2.6 கோடி ரூபாய் வரை வசூல் செய்து சாதனை படைத்திருந்த நிலையில், தற்போது அந்தப் படத்தின் முதல் நாள் வசூல் குறித்துத் தகவலை பட தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ கிரீன் வெளியிட்டுள்ளது.
அதன்படி, ‘தங்கலான்’ திரைப்படம் உலகளவில் ரூ.26.44 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
அதில் தமிழ் மொழியில் 11 கோடி ரூபாய், தெலுங்கு மொழியில் 1.5 கோடி ரூபாய், மலையாளத்தில் 10 லட்ச ரூபாய் என இந்திய அளவில் மட்டும் சுமார் 12.6 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் ‘பான் இந்தியா’ திரைப்படமாக வெளியான ‘ தங்கலான் ‘ திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனர் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். படத்திற்கு மக்களிடேயே கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து பல திரையரங்கிற்கு நேரே சென்று ரசிகர்களைச் சந்திக்க உள்ளனர் ‘தங்கலான்’ படக்குழுவினர்.
– ஷா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
ஜம்மு காஷ்மீர், ஹரியானா சட்டமன்ற தேர்தல்கள் எப்போது?
கனமழைக்கு தயாராகுங்கள் மக்களே!
70வது தேசிய திரைப்பட விருதுகள் – முழு பட்டியல் இதோ!