வாரிசு: கலங்கிய தமன்… கட்டி அணைத்த வம்சி! தட்டி கொடுத்த ஷாம்!

சினிமா

வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான ‘வாரிசு’ திரைப்படம் இன்று (ஜனவரி 11) அதிகாலை 4 மணிக்கு திரையரங்குகளில் வெளியானது.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

வாரிசு படத்தின் மூலம் விஜய் படத்திற்கு முதன்முறையாக இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றார் இசையமைப்பாளர் தமன்.

இந்தப் படத்தை ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் மற்றும் பிவிபி சினிமா தயாரித்துள்ளது. செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ வெளியிட்டுள்ளது.

இந்தப் படத்தில் காதல், தாய்பாசம், ஆக்‌ஷன் என அனைத்து வித உணர்வுகளையும் மையமாக கொண்டு வெளியான பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், வாரிசு திரைப்படத்தை இயக்கிய வம்சி இசையமைப்பாளர் தமன் மற்றும் நடிகர் ஷாம் ஆகியோர் திரையரங்கிற்கு சென்று வாரிசு படத்தை ரசிகர்களுடன் கண்டு களித்தனர்.

அப்போது திடீரென உணர்ச்சிவசப்பட்டு தமன் கண்கலங்கி அழுதார். உடனே அருகில் நின்ற வம்சி தமனை கட்டி அணைத்து ஆறுதல் படுத்த நடிகர் ஷாம் தட்டி கொடுத்தார். இந்த காட்சிகள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

சட்டப்பேரவை வரலாற்றில் அனுப்பப்பட்ட முதல் கடிதம்!

ஆளுநர் என்ன செய்தார் தெரியுமா? எம்.எல்.ஏக்களிடம் ஸ்டாலின் சொன்ன சீக்ரெட்!

ஆளுநர் விவகாரம்…விளக்கம் தந்த தமிழக அரசு…சட்டமன்றத்தில் நடந்தது என்ன?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.