தளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் GOAT திரைப்படத்தின் ரிலீஸ் தேதியினை, படக்குழு லாக் செய்து விட்டதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது விஜய் இரட்டை வேடங்களில் நடித்து வரும் படம் GOAT. ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.
இதில் விஜயுடன் இணைந்து மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபு தேவா, லைலா, சினேகா, ஜெயராம், பார்வதி நாயர், அஜ்மல் அமீர், பிரேம்ஜி, வைபவ், ஆகாஷ் அரவிந்த் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.
சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக், இரண்டாவது லுக் ஆகியவை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினைப் பெற்றது.
இந்த நிலையில் படத்தினை ஜூன் மாதம் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதன்படி பக்ரீத் ஸ்பெஷலாக வருகின்ற ஜூன் 12-ம் தேதி படம் வெளியாக உள்ளதாம்.
பக்ரீத் 16-ம் தேதி தான் என்றாலும் முன்கூட்டியே வெளியிட்டு வசூலைக்குவிக்க படக்குழு திட்டமிட்டு இருப்பதாகவும், அதனால் தான் 4 நாட்கள் முன்னரே படத்தினை வெளியிட முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
Thalapathy Vijay Clean Shave Look For GOAT 😍#TheGreatestOfAllTime pic.twitter.com/TXDZGFSvz4
— Arun Vijay (@AVinthehousee) January 9, 2024
இதற்கிடையில் GOAT படத்திற்காக கிளீன் ஷேவ் லுக்கில் விஜய் இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள், தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி இந்தியளவில் ட்ரெண்டாகி வருகின்றன.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நான்கு வயது மகனை கொன்ற பெண் CEO… விசாரணையில் வெளியான பகீர் தகவல்கள்!
போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த வழக்கு ஒத்திவைப்பு!