தளபதி விஜய் தற்போது ‘GOAT’ திரைப்படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு பாண்டிச்சேரி பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ‘GOAT’ படத்தில், விஜய் இரட்டை வேடங்களில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.
‘தமிழக வெற்றி கழகம்’ என அரசியல் கட்சியை அறிவித்த பின்னர் ‘GOAT’ திரைப்பட ஷூட்டிங்கில் தான் விஜய் முதன்முறையாக ரசிகர்களை சந்தித்து இருக்கிறார்.
அவரைக்காண ரசிகர்கள் பெருமளவில் திரண்டு விட்டனர். இதனால் அந்த இடமே ஸ்தம்பித்து விட்டது. தற்போது அவரின் ஷூட்டிங் ஸ்பாட்டுகளில் பெருமளவில் ரசிகர்கள் திரள ஆரம்பித்து இருக்கின்றனர்.
விரைவில் மாநாடு நடத்தி அதிகாரப்பூர்வமாக கட்சி குறித்தும், தன்னுடைய அரசியல் என்ட்ரி குறித்தும் ரசிகர்கள் மத்தியில் விஜய் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் படம் குறித்த பல புதிய தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. அதன்படி இப்படத்தினை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு வருகிறதாம்.
முன்னதாக விஜய் நடிப்பில் ‘மெர்சல்’, ‘சர்கார்’, ‘பிகில்’ ஆகிய படங்கள் தீபாவளிக்கு வெளியாகி ஹிட்டடித்தன. இதனால் மீண்டும் தீபாவளி செண்டிமெண்டை விஜய் கையில் எடுத்திருக்கிறாராம்.
தற்போதைய நிலவரப்படி டி-ஏஜிங் தொழில்நுட்பம் மூலம் இளம் விஜயின் காட்சிகளை ஷூட் செய்து வருகின்றனர். 5௦% படப்பிடிப்பு தற்போது முடிவடைந்து இருக்கிறது.
மொத்த படப்பிடிப்பையும் ஏப்ரல் மாதத்தில் முடித்து விட்டு, அதன்பின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் கவனம் செலுத்திட படக்குழு முடிவு செய்திருக்கிறது.
‘மாநாடு’ படம் போல டைம் லூப் காட்சிகள் இப்படத்திலும் இடம்பெற உள்ளது. மேலும் இது ஒரு சயின்ஸ் பிக்ஷன் படமாகவும் உருவாகி வருகிறது.
தற்போது பிரஷாந்த் மற்றும் விஜய் சம்பந்தப்பட்ட சண்டைக்காட்சிகளை படம்பிடித்து வருகின்றனர். அதன்படி பார்த்தால் இதில் விஜய்க்கு வில்லனாக பிரஷாந்த் நடித்து வருகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
விஜயுடன் இணைந்து ஏகப்பட்ட நடிக, நடிகையர் நடித்து வருவதால் ‘மங்காத்தா’, ‘மாநாடு’ போல இதுவும் ரசிகர்களுக்கு மறக்க முடியாத படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த படத்தினை தொடர்ந்து தன்னுடைய கடைசி படமான ‘தளபதி 69’ படத்தில் விஜய் நடிக்க இருக்கிறார். இதற்கான முறையான அறிவிப்பு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வெளியாகிட வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அரசு பஸ் ஓட்டை வழியே விழுந்த பெண் : உயர்நீதிமன்றத்தில் முறையீடு!
14+1 சீட் : கூட்டணி விவகாரத்தில் பிரேமலதா கறார்