தளபதி விஜயின் GOAT ரிலீஸ் தேதி இதோ..!

Published On:

| By Manjula

நடிகர் விஜய்யின் 68-வது படமான THE GREATEST OF ALL TIME (GOAT) படத்தின் படப்பிடிப்பு தற்போது ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்க, ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறது.

நடிகர் விஜய் இரு வேடங்களில் நடிக்கும் GOAT படத்தில் அவருடன் இணைந்து பிரபு தேவா, பிரசாந்த், அஜ்மல், மீனாட்சி சவுத்ரி, சிநேகா, லைலா, உட்பட பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். Sci-Fi கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆனது.

இந்நிலையில் இன்று (ஏப்ரல் 11) GOAT படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை முன்னிட்டு நடிகர் விஜய்யின் புதிய போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இதற்கிடையில் GOAT படப்பிடிப்பில் பிசியாக இருந்த விஜய் திடீரென தனது அரசியல் கட்சியின் பெயரை அறிவித்து முழு அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்தார்.

அதோடு இன்னும் ஒரு படத்தில் மட்டும் தான் நடிப்பேன் என்று தெரிவித்து உள்ளார். இதனால் அவரது கடைசி படமான தளபதி 69 படத்தின் மீது மிகப்பெரும் எதிர்பார்ப்பு நிலவிவருவது குறிப்பிடத்தக்கது.

ஹெச். வினோத் இயக்கும் தளபதி 69 படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

-கார்த்திக் ராஜா 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கர்ப்பமாக இருக்கிறேனா?… வைரலாகும் நடிகை ஷபானாவின் பதிவு!

“இபிஎஸ் ‘ரோடு ஷோ’ போக தயாரா?” – அண்ணாமலை சவால்!

Video: கல்லூரி சீனியருடன் இணைந்த பிரதீப்… யாருன்னு தெரியுதா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share