தளபதி விஜய் வாங்கிய முதல் எலெக்ட்ரிக் கார்… என்ன ஸ்பெஷல்?

Published On:

| By Manjula

thalapathy vijay electric car

thalapathy vijay electric car

தளபதி விஜய் தற்போது முதன்முறையாக சொகுசு பிஎம்டபிள்யூ எலெக்ட்ரிக் கார் ஒன்றை வாங்கியுள்ளார்.

லியோ படத்திற்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு The Greatest Of All Time சுருக்கமாக GOAT என பெயர் வைக்கப்பட்டு உள்ளது.

விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கும் இப்படம் பக்ரீத் ஸ்பெஷலாக இந்தாண்டு ஜூன் மாதம் திரைக்கு வரும், என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் முதல் சொகுசு எலெக்ட்ரிக் கார் ஒன்றை விஜய் வாங்கியுள்ளார். BMW i7 xDrive 60 என்ற இந்த மாடல் காரில் 31.3 இன்ச் 8K ஸ்க்ரீன், மினி ஹோம் தியேட்டர் என பல அதிநவீன டெக்னாலஜிகள் உள்ளன.

இந்த காரை ஒரு முறை சார்ஜ் செய்தால் 625 கிலோமீட்டர் வரை ரேஞ்ச் தரும் என, பிஎம்டபிள்யூ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன் விலை ரூபாய் 2-2.5 கோடி வரை இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்தியாவில் தற்போது அரிதான எண்ணிக்கையிலேயே இந்த கார்கள் உள்ளன.

கார் பிரியரான தளபதி விஜய்யிடம் ஏற்கனவே ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட், ஆடி ஏ8, பிஎம்டபிள்யூ 7 சிரீஸ், எக்ஸ் 6, மெர்சிடீஸ் பென்ஸ் ஜிஎல்ஏ, லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் எவோக், பிஎம்டபிள்யூ 5 சீரிஸ், ஃபோர்டு மாஸ்டாக், வால்வோ எக்ஸ்சி 90, பென்ஸ் இ 350 டி, பென்ஸ் 3 சிரீஸ், மினி கூப்பர் எஸ்,டொயோட்டா இன்னோவா கிரைஸ்டா, மாருதி சுஸூகி செலிரியோ ஆகிய கார்கள் உள்ளன.

அந்த வரிசையில் லேட்டஸ்ட்டாக இந்த BMW i7 xDrive 60 காரும் தற்போது இணைந்துள்ளது. விஜய் வைத்திருப்பதில் அதிக காஸ்ட்லியான கார் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் தான். இந்த காரின் விலை சுமார் 8 கோடி ரூபாய் ஆகும்.

-மஞ்சுளா 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

திமுக எம்எல்ஏ மகன் ஜாமீன்: உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

கிளாம்பாக்கம்தான்… ஆர்டர் போடும் அரசு: கோயம்பேடுதான் -அடம்பிடிக்கும் ஆம்னி… அவதியில் மக்கள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel