தளபதி விஜய் சமீபத்தில் அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். இந்த செய்தி அவரது ரசிகர்களுக்கு மிகுந்த மன உளைச்சலைக் கொடுத்தது.
காரணம் அவர் சினிமாவில் இருந்து முற்றிலுமாக விலகுவதாகக் கூறியுள்ளார். இந்நிலையில் அவர் தற்பொழுது நடித்துவரும் ‘GOAT’ திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.
வெங்கட் பிரபு இயக்கத்தில், கல்பாத்தி S அகோரம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். இந்த திரைப்படத்தில் விஜயுடன் இணைந்து ஜெயராம், சினேகா, மோகன், பிரபுதேவா, பிரசாந்த், லைலா போன்ற பல நடிகர்கள் கமிட் ஆகியுள்ளனர்.
திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி உலகமெங்கும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் தளபதி விஜய் ரசிகர்களுக்கு டபுள் டமாக்காவாக மற்றொரு சுவாரசியமான தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது படத்தில் நடிகர் விஜய் இரண்டு வேடங்களை ஏற்று நடிக்கிறார். அதில் ஒரு கதாபாத்திரம் வில்லத்தனம் மிகுந்த அப்பாவாகவும், மற்றொரு கதாபாத்திரம் ப்ரோபஸர் என்றும் தெரியவந்துள்ளது.
இந்த தகவலை கேட்ட அவரது ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர்.முன்னதாக நடிகர் அஜித் குமாருக்கு ஆல் டைம் ஹிட்டான ‘மங்காத்தா’ திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி இருந்தார்.
இதனால் விஜய்-வெங்கட் பிரபு காம்போவில் உருவாகி வரும் இப்படத்திற்கு, ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.
-பிரியங்கா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ரொம்ப நல்லா இருக்கு… சிவகார்த்திகேயனின் படத்திற்கு குவியும் ஆதரவு!
உலக புத்தக நாள் 2024 : 10 ஆளுமைகளை சந்திக்கலாமா?
Video: ‘பிரியாணிக்கு வெயிட்டிங்’… மீண்டும் கவனம் ஈர்த்த விஷால்