தளபதி விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தன்னுடைய 68-வது படமான GOAT-ல் நடித்து வருகிறார். இதில் அவருக்கு இரண்டு வேடம் என்றும் சினேகா, மீனாட்சி சவுத்ரி இருவரும் ஜோடியாக நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
தளபதி 69 படத்தினை கார்த்திக் சுப்புராஜ் இயக்கப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனினும் தயாரிப்பு நிறுவனம் குறித்த தகவல்கள் இன்னும் உறுதியாகவில்லை.
இந்த நிலையில் விஜயின் 7௦-வது படத்தை டோலிவுட்டின் பிரபல தயாரிப்பு நிறுவனமான, டிவிவி எண்டெர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
தற்போது இந்நிறுவனம் பவன் கல்யாண் மற்றும் நானி ஆகியோரை வைத்து தன்னுடைய அடுத்த இரண்டு படங்களை தயாரித்து வருகிறது. இந்த படங்களுக்கு பின்னர் விஜய் படத்தை தயாரிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
ராஜமௌலி இயக்கத்தில் கடந்த 2௦22-ம் ஆண்டு வெளியாகி உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற, RRR திரைப்படத்தினை பிரமாண்ட பொருட்செலவில் டிவிவி நிறுவனம் தான் தயாரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
–மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
எம்பி தேர்தலில் இளைஞர் அணியினருக்கு வாய்ப்பு: உறுதி தந்த உதயநிதி
தங்கம், வெள்ளி விலை: இன்றைய நிலவரம்!