Thalapathy69: வெளியான புதிய அப்டேட்… ஒவ்வொரு சீனும் தெறிக்க போகுது!

Published On:

| By Manjula

thalapathy 69 h vinoth

விஜய் நடிப்பில் உருவாகும் கடைசி படத்தை இயக்கப்போவது யார்? என்ற கேள்வி தான் கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து வருகிறது.

இந்த போட்டியில் அட்லி, நெல்சன் திலீப்குமார், லோகேஷ் கனகராஜ், ஷங்கர், கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் முன்னணியில் உள்ளனர்.

டிவிவி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் தான், விஜயின் கடைசி படமாக இருக்கும் என கூறப்படுகிறது.

இது விஜய் ரசிகர்களுக்கு வருத்தமாக இருந்தாலும், தளபதியின் கடைசி படம் அவருக்கு மாஸாக இருக்க வேண்டும் எனவே அட்லியை இயக்க சொல்லுங்கள் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் தளபதியின் 69-வது படத்தினை, ஹெச்.வினோத் இயக்கவுள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

கமலின் 233-வது படத்தினை ஹெச்.வினோத் இயக்குவதாக இருந்தது. ஆனால் அந்த படம் டிராப் ஆகிவிட்டதாக தெரிகிறது.

சமீபத்தில் வெளியான கமலின் புதிய படங்கள் குறித்த அப்டேட்டில் கூட ஹெச்.வினோத் படம் இடம்பெறவில்லை. இதைப்பார்த்த ரசிகர்கள் வினோத், கமலை இயக்கவில்லையா? என கேள்வி எழுப்பி இருந்தனர்.

இதற்கிடையில் அரசியல் பின்னணியுடன் கூடிய கதையொன்றை, விஜயை வைத்து வினோத் இயக்கப்போவதாக கூறப்படுகிறது.

தற்போதைய நிலவரப்படி விஜயின் கடைசி படத்தினை இயக்குவதற்கான போட்டியில் வினோத், கார்த்திக் சுப்புராஜ் இருவரும் தான் முன்னணியில் இருக்கின்றனர்.

இதில் வினோத்தை விஜய் தேர்வு செய்திட வாய்ப்புகள் அதிகம் இருக்கிறதாம். இதை உறுதிப்படுத்துவது போல வினோத் தற்போது கதை எழுதும் பணியில் தீவிரம் காட்டி வருகிறாராம்.

ராஜ்கமல் நிறுவனத்திடம் இருந்து தடையில்லா சான்றிதழ்(NOC) பெற்று விட்டால் வினோத்-விஜய் கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகி விடும். எனவே இவர்கள் இணைவதற்கே வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.

இன்னும் 2 அல்லது 3 மாதங்களில் டிவிவி நிறுவனம் படத்தின் இயக்குநர் மற்றும் பிற விவரங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தன்னுடைய படங்களில் ஒவ்வொரு சீனையும் பார்த்துப்பார்த்து எடுப்பார் என்பதாலும், கதைக்கு முக்கியத்துவம் அளிக்கக்கூடியவர் என்பதாலும் இந்த காம்பினேஷன் கை கூடினால் விஜய்க்கும், அவரது ரசிகர்களுக்கும் காலத்திற்கும் மறக்க முடியாத படமாக ‘தளபதி 69’ இருக்கக்கூடும்.

தளபதி 69 படத்திற்காக வினோத்-விஜய் இணைவார்களா? என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

-மஞ்சுளா 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

விமர்சனம்: டெவில்!

விமர்சனம்: மறக்குமா நெஞ்சம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share