Thalapathy 69: விஜயின் சம்பளம் இத்தனை கோடியா?

Published On:

| By Manjula

thalapathy 69 vijay last film

தளபதி விஜயின் 69-வது படத்தை இயக்கும் போட்டியில் ஹெச்.வினோத், வெற்றிமாறன், கார்த்திக் சுப்புராஜ் என மூன்று இயக்குநர்கள் தற்போது முன்னணியில் உள்ளனர். டோலிவுட் நிறுவனமான டிவிவி எண்டெர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இப்படம் தான், விஜயின் கடைசி படமாக இருக்கும் என கூறப்படுகிறது.

படத்தின் இயக்குநர் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றாலும் கூட, தளபதி விஜயின் சம்பளம் இந்த படத்தில் எவ்வளவு என்கிற விவரங்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன. அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்றாலும் கூட கடைசி படம் என்பதால் சுமார் 200 கோடிக்கு மேல் அவர் இந்த படத்தில் சம்பளம் வாங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ்நாடு தாண்டி கேரளா, ஆந்திராவில் விஜய்க்கென தனி மார்க்கெட் உள்ளது. அதோடு இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் படம் ‘டப்’ செய்யப்பட்டு வெளியாகும். மேலும் சாட்டிலைட், ஓடிடி உரிமையும் நல்ல தொகைக்கு போகும் என்பதாலும் இந்த சம்பளத்தை கொடுக்க தயாரிப்பு நிறுவனம் முன் வந்துள்ளதாம்.

டிவிவி நிறுவனம் ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான ‘ஆர்ஆர்ஆர்’ படத்தை, மிகப்பெரும் பொருட்செலவில் தயாரித்து வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

-மஞ்சுளா 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஜாமீன் கேட்ட திமுக எம்எல்ஏ மகன்,மருமகள் : கோர்ட் உத்தரவு!

கொந்தளித்த ரோஹித் சர்மா மனைவி… மும்பை இந்தியன்ஸ் ‘இமேஜ்’ டோட்டலா காலி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment