thalapathy 67 update

தளபதி 67: விஜய் பட அப்டேட்!

சினிமா

விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ.

நடிகர் விஜய் நடிப்பில் வாரிசு படம் பொங்கல் கொண்டாட்டமாகக் கடந்த ஜனவரி 11 ஆம் தேதி வெளியானது. இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.

இதனைத் தொடர்ந்து, விஜய் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ’தளபதி 67’ என்று தற்காலிகமாகப் பெயரிடப்பட்ட படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 2 ஆம் தேதி தொடங்கியது.

இந்நிலையில், தளபதி 67 படத்தின் தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ இன்று (ஜனவரி 30) மாலை அப்டேட் வெளியிடுவதாக அறிவித்திருந்தது.

அதன்படி வெளியிடப்பட்ட அப்டேட்டில், “மதிப்புமிக்க எங்களது அடுத்த புராஜெக்ட்டின் அறிவிப்பை அதிகார பூர்வமாக வெளியிடுவதில் மகிழ்ச்சி. மாஸ்டர் மற்று வாரிசு படங்களின் வெற்றிக்குப் பிறகு மூன்றாவது முறையாக தளபதி விஜய் உடன் இணைவதில் பெருமையாக உணர்கிறோம்.

மாஸ்டர் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படத்திற்குத் தற்காலிகமாக ‘தளபதி 67’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

எஸ்.எஸ். லலித் குமார் தயாரிப்பில், ஜெகதிஷ் பழனிசாமி துணை தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 2 ஆம் தேதி தொடங்கியது.

மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் இந்த படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர்.

கத்தி, மாஸ்டர், பீஸ்ட் படங்களுக்கு இசையமைத்த அனிருத் ரவிசந்தர் இந்த படத்தின் மூலம் 4 வது முறையாக விஜய் உடன் இணைந்துள்ளார்.

படக்குழுவினர்

புகைப்பட இயக்குநராக மனோஜ் பரமஹம்சா, சண்டை – அன்பறிவு, எடிட்டிங்- பிலோமின் ராஜ், கலை – என். சதிஷ்குமார், நடனம் – தினேஷ், வசனம்- லோகேஷ் கனகராஜ், ரத்ன குமார் மற்றும் தீரஷ் வைதி, நிர்வாக தயாரிப்பாளர்- ராம்குமார் பாலசுப்பிரமணியன்.

தளபதி 67 படத்தின் நடிகர்கள், படக்குழுவினர் குறித்த மற்ற அறிவிப்புகள் விரைவில் அறிவிக்கப்படும்.

உங்கள் அனைவரது ஆதரவும், ஆசீர்வாதமும், பாராட்டுகளும் தளபதி 67 படத்திற்கு வேண்டும். அன்புடன், தளபதி 67 குழு” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மோனிஷா

“அந்த வலி மோடிக்கும் அமித் ஷாவுக்கும் புரியாது”: ராகுலின் யாத்திரை நிறைவு!

அதிமுக பொது செயலாளர் பதவி : சசிகலா கேவியட் மனு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *