லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘தளபதி 67’ படத்தின் தலைப்பு நாளை (பிப்ரவரி 3) வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தளபதி 67 என்றழைக்கப்படும் விஜய் – லோகேஷ் கூட்டணியில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. விஜய் – லோகேஷ் ஆகியோர் இரண்டாவது முறையாக இணையும் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது
இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா, மன்சூர் அலிகான், இயக்குநர் மிஷ்கின், நடன இயக்குநர் சாண்டி, நடிகை ப்ரியா ஆனந்த், நடிகர் அர்ஜுன், இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், சஞ்சய் தத் ஆகியோர் நடிக்கின்றனர். படத்திற்கான இசையை அனிருத் அமைக்கிறார்.
இந்தப் படத்தின் டிஜிட்டல் உரிமத்தை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனமும், சாட்டிலைட் உரிமத்தை சன் டிவியும் பெற்றுள்ளது.
இந்நிலையில், படத்தின் தலைப்பு நாளை மாலை 5 மணி அளவில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
தோனிக்கு அடுத்து நான் தான்: ஹர்திக் பாண்டியாவை சாடும் ரசிகர்கள்!
கல்வீச்சு – கண்ணீர் புகை – தடியடி : கலவர பூமியாய் மாறிய எருதுவிடும் விழா!