எதிர்பார்ப்பை மிஞ்சி மிரட்டும் ‘தளபதி 67’ டைட்டில்!
நடிகர் விஜய்யின் கேரியரில் ‘தளபதி 67’ படத்திற்கு கிடைத்திருக்கும் எதிர்பார்ப்பு இதுவரை வேறு எந்த படத்திற்கும் கிடைத்ததில்லை.
எப்போது மாஸ்டர் படத்தினைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ளார் என்று அறிவிப்பு வந்ததோ, அப்போது முதல் தளபதி 67 படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உருவாகிவிட்டது.
ஓராண்டாக ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த படத்தின் அப்டேட்களை கடந்த 3நாட்களாக படக்குழு வெளியிட்டு வருகிறது.
அதன்படி நடிகர் விஜய்க்கு ஜோடியாக 14வருடங்களுக்கு பிறகு த்ரிஷா இப்படத்தில் இணைகிறார். மேலும் சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பல்வேறு திரையுலகைச் சேர்ந்த நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.
அதோடு, கைதி படத்தில் நடித்திருந்த நடிகர் மரியம் ஜார்ஜ், விக்ரம் படத்தில் ஏஜென்ட் டீனாவாக கலக்கிய வசந்தி ஆகியோர் சமீபத்தில் காஷ்மீர் சென்றுள்ள படக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில் தளபதி 67படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு வெளியானதிலிருந்து சமூக வலைதளங்களில் பல்வேறு படத்தலைப்புகள் உலா வரத் தொடங்கின.
அதன்படி, குருதி, ஈகிள், கருடன், வாத்தி என பல்வேறு தலைப்புகள் ஊகங்களாக வெளிவந்த நிலையில், தளபதி 67படத்தின் அதிகாரப்பூர்வ டைட்டில் வீடியோவை நடிகர் விஜய் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில் சாக்லேட் தயாரித்துவரும் விஜய், அதற்கு ஈடாக கூர்மையான வாளையும் தயார்செய்யும் மிரட்டலான காட்சிகள் ப்ரோமோ வீடியோவில் இடம்பெற்றுள்ளது.
மேலும் தளபதி 67 படத்துக்கு ’லியோ’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. 4 மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகும் இப்படம் வரும் அக்டோபர் 19ம் தேதி வெளியாகிறது.
இதன் மூலம் வழக்கம் போல அனைவரது கணிப்பையும் பொய்யாக்கி அதிரிபுதிரியான வெற்றிக்கு தயாராகி இருக்கிறது விஜய் – லோகேஷ் – லலித் கூட்டணி!
கிறிஸ்டோபர் ஜெமா
பிபிசி ஆவணப்படத்திற்கு தடை : மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!
ஆர்.என்.ரவி போல் இல்லை: ஆளுநர் உரையை அப்படியே வாசித்த தமிழிசை