தளபதி 67 படத்திற்காக கொடைக்கானல் சென்றுள்ள படக்குழு 6 நாட்கள்,இயக்குனர் மிஷ்கின் நடிக்கும் காட்சிகளை படமாக்க இருக்கிறது.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் குமார் தயாரிப்பில், நடிகர் விஜய், லோகேஷ் கனகராஜ் இரண்டாவது முறையாக கூட்டணி அமைக்கும் திரைப்படம் தளபதி 67.
விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா, முக்கிய கதாபாத்திரத்தில் மிஷ்கின், கௌதம் வாசுதேவ மேனன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
மிகப்பெரிய எதிர்பார்ப்புள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் ஜனவரி முதல் வாரத்தில் சென்னையில் நடந்து முடிந்தது.
வாரிசு திரைப்படம் வெளியீட்டிற்க்காக பிரேக் விடப்பட்ட நிலையில் மீண்டும் படப்பிடிப்பை தொடங்கியுள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.
தளபதி 67 படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் நடிக்கும் மிஷ்கின் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்குவதற்காக கொடைக்கானல் சென்றுள்ளது படக்குழு.
இன்று முதல் ஜனவரி 26 ஆம் தேதி வரை படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு அதன் பணிகளை தொடங்கியுள்ளது. இந்த படத்தில் பல வில்லன்கள் நடித்து வரும் நிலையில் அதில் ஒரு வில்லனாக மிஷ்கின் நடித்து வருகிறார்.
கொடைக்கானலில் நடைபெறும் படப்பிடிப்பில் நடிகர் விஜய் கலந்து கொள்ள மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
படத்தில் நடிப்பவர்கள், தொழில்நுட்பக் குழுவினர் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
கலை.ரா
“இரட்டை இலை யாரிடம் இருக்கிறதோ அவருக்கே ஆதரவு”- ஜான் பாண்டியன்
தந்தை மீது படுத்து பியானோ வாசித்த லிடியன்