thalapathy 67 actress trisha

14 வருடங்களுக்குப் பின் விஜய்யுடன் இணையும் த்ரிஷா

சினிமா

தளபதி 67 படத்தில் நடிகர் விஜய் உடன் இணைந்து நடிகை த்ரிஷா நடிக்கவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் இன்னும் பெயர் சூட்டப்படாத படத்தில் நடித்து வருகிறார். மாஸ்டர் படத்திற்கு பின் இரண்டாவது முறையாக விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைவதால் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில், படத்தின் அப்டேட்டுகளை கடந்த 2 நாட்களாக அதிரடியாக வெளியிட்டு வந்தது தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன்.

அதன்படி இசையமைப்பாளர் அனிருத்… கத்தி, மாஸ்டர், பீஸ்ட் படங்களுக்குப் பிறகு 4வது முறையாக விஜய் உடன் இணைந்துள்ளார்.

மேலும், ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா, சண்டைப் பயிற்சியாளராக அன்பறிவ், படதொகுப்பாளராக ஃபிலோமின் ராஜ், கலை இயக்குநராக சதீஷ் குமார், நடன இயக்குநராக தினேஷ் மாஸ்டர், வசனங்களை லோகேஷ் கனகராஜ், ரத்னகுமார், தீரஜ் வைத்தி ஆகியோர் சேர்ந்து எழுதுகின்றனர் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து நேற்று (ஜனவரி 31) 2வது நாளாகப் படத்தில் நடிக்கும் நடிகை, நடிகர்கள் பெயரை மதியம் 3 மணி முதல் அறிவித்து வந்தது செவன் ஸ்கிரீன்.

அதன்படி, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், இயக்குநர் மிஷ்கின், மன்சூர் அலிகான், கேரள இளம் நடிகர் மேத்யூ தாமஸ், இயக்குநரும் நடிகருமான கெளதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன் ஆகியோர் நடிக்க உள்ளனர்.

thalapathy 67 actress trisha reunite with vijay for the 5th time

இந்நிலையில், 3வது நாளாக இன்று (பிப்ரவரி மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு அப்டேட்டை கொடுத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை உறுதிப்படுத்தியுள்ளது படக்குழு.

விஜய் உடன் நடிகை த்ரிஷா தளபதி 67 படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி ஆகிய படங்களில் விஜய் உடன் இணைந்து நடித்த த்ரிஷா 14 ஆண்டுகளுக்குப் பிறகு 5வது முறையாக மீண்டும் இணையவுள்ளார்.

தளபதி 67 படத்தின் இசை உரிமையை சோனி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

தளபதி 67 படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இதற்காக படக்குழு நேற்று (ஜனவரி 31) தனிவிமானம் மூலம் காஷ்மீருக்கு சென்றது.

மோனிஷா

எடப்பாடி வேட்பாளருக்கு போட்டியாக பன்னீரின் வேட்பாளர்: இரட்டை இலை முடங்குகிறதா?

தடயவியல் அறிக்கைக்காக காத்திருக்கிறோம் : ஸ்ரீமதி வழக்கில் சிபிசிஐடி!

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *