‘ஜெயிலர்’, ‘லால் சலாம்’ படங்களுக்குப்பிறகு ரஜினிகாந்த் தற்போது தன்னுடைய 17௦-வது படமான வேட்டையனில் நடித்து வருகிறார்.
‘ஜெய்பீம்’ புகழ் த.செ.ஞானவேல் இயக்கி வரும் இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.
அனிருத் இசையமைப்பில் உருவாகி வரும் ‘வேட்டையன்’ படத்தை, லைகா நிறுவனம் மிகப்பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. தற்போது படத்தின் 80% படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளது. தீபாவளி விருந்தாக ‘வேட்டையன்’ வெளியாகலாம் என கூறப்படுகிறது.
இதையடுத்து ரஜினி, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தன்னுடைய 171 -வது படத்தில் நடிக்கவிருக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படம் தற்காலிகமாக ‘தலைவர் 171’ என அழைக்கப்படுகிறது. அனிருத் இசையமைப்பில் உருவாகும் இப்படத்தின் ஷூட்டிங் ஏப்ரல் மாதம் தொடங்கவிருக்கிறது.
தற்போது படத்தின் முன் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இதில் ரஜினிக்கு வில்லனாக, நடிகர் ராகவா லாரன்ஸ் ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
முன்னதாக ‘தலைவர் 171’ படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் தற்போதைய நிலவரத்தின்படி இதில் அவர் நடிக்கவில்லை என்று தெரிய வந்துள்ளது.
விரைவில் படத்தின் நடிக, நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் குறித்து படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளனர். இந்த படத்துக்கு பிறகு நெல்சன் இயக்கத்தில் ரஜினி தன்னுடைய 172-வது படமான, ‘ஜெயிலர் 2’ படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
எலெக்சன் ஃப்ளாஷ்: ஜெயித்தாலும் தோற்றாலும் மத்திய அமைச்சர்! பாரிவேந்தர், ஏ.சி.சண்முகம் திட்டம்!
டிஎன்பிஎஸ்சி மூலம் 50 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் : முதல்வர் ஸ்டாலின்