கூலி : பாலிவுட் நடிகர் தேடலில் லோகேஷ் கனகராஜ்

சினிமா

இந்திய சினிமாவில் தற்போது தி மோஸ்ட் வாண்டட் இயக்குநர் ஆக திகழ்பவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

இவரது இயக்கத்தில் வெளியான மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என அனைத்து படங்களும் ஹிட் அடித்தது.

இந்தப் படங்களின் வெற்றிக்குப் பிறகு  லோகேஷ் நடிகர் ரஜினிகாந்தின் 171 வது படத்தை இயக்குவார் என்று அறிவிக்கப்பட்டது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார்.

தலைவர் 171 படத்திற்கு “கூலி” என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் புரோமோ வீடியோ வெளியானது.

தங்க கடத்தலை மையமாகக் கொண்டு இந்த படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்ட இருப்பதாக தெரிகிறது.

கூலி படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஒரு பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து கூலி படத்தின் திரைக்கதை எழுதப்பட்டு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிகர் சத்ய ராஜ், நடிகை ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்க உள்ளார்கள் என்றும் ரஜினிக்கு ஜோடியாக நடிகை ஷோபனா நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஒரு பிரபல பாலிவுட் நடிகரை கூலி படத்தில் நடிக்க வைக்க லோகேஷ் முயற்சி செய்து வருகிறார் என்று ஒரு புதிய தகவல் வெளியாகி உள்ளது.

பாலிவுட் பாஷா என்று அனைவராலும் கொண்டாடப்படும் நடிகர் ஷாருக் கானை கூலி படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க லோகேஷ் பேச்சுவார்த்தை நடத்தினார் என்று செய்தி வெளியானது.

ஆனால் சமீபத்தில் ஷாருக் கான் நடிக்கவில்லை அதற்கு பதிலாக நடிகர் ரன்வீர் சிங் நடிக்க உள்ளார் என்றும்  ஆனால்  கால்ஷீட் பிரச்னை காரணத்தினால் ரன்வீர் சிங் கூலி படத்தில் நடிக்க போவதில்லை என்றும் சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.

அதன் காரணமாக வேறு ஒரு பாலிவுட் நடிகருடன் பேச்சுவார்த்தையை லோகேஷ் கனகராஜ் தொடங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

ரஜினியின் ஜெயிலர் படத்தில் மோகன் லால், சிவராஜ்குமார் ஆகியோர் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்தது அந்த படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்தது. அதே ஃபார்முலாவை பின்பற்றி தற்போது ரஜினி வேட்டையன் படத்தில் அமிதாப் பச்சனை நடிக்க வைத்திருக்கிறார்.

அந்த வரிசையில் கூலி படத்திற்கும் ஒரு பாலிவுட் நடிகரை லோகேஷ் கனகராஜ் தேடி வருகிறார்.

– கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

நாக சைதன்யாவின் புது கார்.. விலை என்ன தெரியுமா?

ரூ.1,300 உயர்ந்த வெள்ளி விலை… தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?

குழந்தை ஆணா? பெண்ணா?: மன்னிப்பு கேட்ட இர்பான்

share market: இந்த வாரத்துக்கு தோதான பங்குகள்!

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0