ஜெயிலர் படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றிக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெய் பீம் பட இயக்குனர் தா.செ. ஞானவேல் இயக்கத்தில் “தலைவர் 170” உருவாக இருக்கிறது. இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கின்றது.
தலைவர் 170 குறித்த அறிவிப்பு வெளியானதிலிருந்து இந்த படத்தில் பகத் பாசில், நானி, சர்வானந்த், அமிதாப் பச்சன் போன்ற முன்னணி நடிகர்கள் நடிக்கப் போகிறார்கள் என்று அரசல் புரசலாக பல தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது.
ஆனால் இந்த தகவல்களை எல்லாம் கண்டுகொள்ளாமல் மௌனமாக இருந்த படக் குழுவினர், தற்போது தலைவர் 170 பற்றிய ஒரு செம அப்டேட்டை வெளியிட்டு உள்ளனர்.
அது என்னவென்றால் தலைவர் 170வது படத்தில் நடிக்க இருக்கும் மற்ற நடிகர்கள் குறித்த விவரங்கள் நாளை முதல் அறிவிக்கப்படும் என்று லைக்கா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு குறித்து லைக்கா நிறுவனம் X பக்கத்தில் #Thalaivar170squad என குறிப்பிட்டுள்ளது. தற்போது சமூக வலைதளங்களில் #Thalaivar170squad வைரலாக தொடங்கியுள்ளது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வேலைவாய்ப்பு: தேசிய காசநோய் ஆராய்ச்சி மையத்தில் பணி!
ஒன்பது மாதங்களில் 146 புலிகள் பலி: காரணம் என்ன?